பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 - பரிபாடல் மூலமும் உரையும் நீல மயிலைப் போன்ற சாயலினரான பெண்கள். களவொழுக்கத்தில் தம் காதலரைக் கூடியின்புறுவர். பின்னர், அவரே தம் காமக்கூட்டமாகிய களவொழுக்கத்தைக் கைவிட்ட வராக, முயற்சி கொள்ளும் கற்புநெறியினையும் அடைந்திருப்பர். அவ்வாறே, மிக்க புனலையுடைய வையைப் பெண்ணாளான நீயும், நின் பிறந்தவீடாகிய பெருமலையை விட்டு நீங்கி, நீ நிலையாகத் தங்கியிருத்தற்குரிய இடமாகிய கடலைநோக்கிச் செல்கின்றனை. இவ்வாறு செல்லும் நீதான் தனியாகச் செல்வது இழிவானது என்று மக்கள் கூறுவர். கடையழிய நீண்டும் அகன்றும் விளங்கும் கண்ணாளான தன் காதலியைக், ! காளையானவன், தன் கைப்படையாகிய துணை யோடுங் கூடியவனாகத் தன்னுடன் உடன்போக்கில் அழைத்துச் சென்றான். அதனையறிந்த தலைவியின் சுற்றத்தார், இடை வழியில் அவர்களின் போக்கைத் தடுத்து நிறுத்தினர். அதனைப் போலவே, வெற்றியாளரான மதுரை மக்கள் அணையிட்டுத் தடுத்து நிறுத்துதலினாயே, வையை யாறும், மக்கள் நீராடிக் களித்தற்குப் பொருந்தியதாக அமைந்தது. - சொற்பொருள் : மா மயில் நீலமயில், அன்னார் - மயிலனையவரான கன்னியர் மறை களவொழுக்கம் மைந்தர் - காளையர் மைந்து - ஆற்றல், மல்லல் புனல் - பெருகிவரும் புதுப்புனல். படை - ஆயுதம். நெறி வழி. அடல் மதுரை - பகைவரைக் கொல்லும் ஆற்றலுடையார் வாழும் மதுரை. நீர் - தன்மையும் ஆம். - - போர்க்களம் போல்வது ஆற்றணி, வெள்வாள் விதிர்ப்போர்; மிளிர்குந்தம் ஏந்துலோர் 50 கொள்வார் கோல்கொள்ளக் கொடித்திண்டேர் ஏறுவோர் புள்ளேர் புரவி பொலம்படைக் கைம்மாவை வெள்ளநீர் நீத்தத்துள் ஊர்பூர்பு உழக்குநரும் கண்ணாருஞ் சாயற் கழித்துரப் போரை * வண்ணநீர் கரந்த வட்டுவிட் டெறிவோரும் 55 மளம்வரு மாலையின் வட்டிப் போரைத் துணியினர் மருப்பின் நீரெக்கு வோரும் தெரிகோதை நல்லார்தங் கேளிர்த் திளைக்கும் 'உருகெழு தோற்றம் உரைக்குங்கால் நாளும் பொருகளம் போலும் தகைத்தே பரிசுவரும் 60 பாய்தேரான் வையை யகம்; - மதுரை நகரத்தார்ஆற்றின்கண் நீராடுவதற்காக வந்து, திரண்டு நின்றனர். அவர்கள் நின்ற காட்சியை வருணிக்கின்றார். ஆசிரியர்; வெள்ளிய வாட்களைச் சுழற்றி நின்றனர் சிலர்.