பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (11) 1 2 1 ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப வெம்ப்ாதாக வியனில வரைப்பென - 80 அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் - - முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப் பருமணல் அருவியின் ஊதை ஊர்தர உறைசிறை வேதியர் - * நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின் 85 தையல் மகளிர் ஈரணி புலர்த்தர வையை! நினக்கு மடைவாய்த் தன்று; மையாடல் ஆடல் மழபுலவர் மாறெழுந்து பொய்யாடல் ஆடும் புணர்ப்பின் அவரவர் தீயெரிப் பாலும் செறிதவமுன் பற்றியோ 90 தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல் நீயுரைத்தி வையை நதி, - முழக்கத்தோடுங் கூடிய அதிர்கின்ற குரலைக்கொண்ட மேகங்களும் வானத்தைவிட்டு நீங்கின. பெய்கின்ற பனியினாலே நடுங்குதலைக் கொண்ட பின்பணிப் பருவமும் வந்தது. அக் காலத்து ஞாயிறு காய்ந்து வருத்துவதில்லை; குளிர்ந்த பின் மழையும் பெய்யும். அக்காலத்தே களங்கமாகிய மறுவோடு விளங்கும் பெரிய திங்களின், பிறை நிறைவுற்று விளங்கும் பெளர்ணமி நாளாகிய திருவாதிரை நாளில், விரிந்த நூல்களைக் கற்றோரான அந்தணர், சிவபிரானுக்கு விழாச் செய்தலைத் தொடங்கினர். முப்புரி நூலினரான அந்தணர் பூசைப் பொருள் களைப் பொற்கலங்களுள் ஏந்தியவாறு நின்றனர். பரந்த இந் நிலப்பரப்பானது வெம்மையால் வாடாதிருப்பதாக’ என அனைவரும் வேண்டினர். அழகிய வளையணிந்தோரான கன்னிப் பெண்கள் மார்கழி நோன்பேற்றவராக நீராடியபடி நின்றனர். சடங்குகளை அறிந்தோரான முதுபெண்டிர் அக்கன்னியருக்கு நோன்புபூண்டு நீராடும் முறைமையைக் காட்டினர். பனியோடுங் கூடிய புலர்காலைப் பொழுதினைப் பாடியபடிய்ே அவர்கள் ஆடினர். பருத்த மணலிடத்தே அருவியைப்போல ஒடும் நீரிற் படிந்துவந்த வாடைக்காற்றும் வந்து வீசிற்று.அதனாற் பெண்கள் நடுங்கினர். - W கரையிடத்துத் தங்கியிருந்து, வேதியர்கள், தம்வேத நெறிப்படி வளர்த்துக் காத்துவருவதும், நிமிர்ந்து வளைவோடு எரிந்து கொண்டிருப்பதுமான வேள்வித்தீயருகே சென்று, அவ்வழகிய பெண்கள் தம் ஈரமான உடைகளைப் புலர்த்திய