பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (11) 123 நில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே மல்லிகா மாலை வளாய்; - 105 இவ்வாறு பெண்கள் நீராடி இன்புற்றனர். அவ்விடத்தே, இளமையும் அழகும் செறிந்த ஒருத்தி தன் காதிற் கரிய நீலத்தின் இதழைச் சூடிக்கொண்டவளாக, மற்றொருத்தியை நோக்கி னாள். மூங்கிலின் அழகையும் வென்று, அக் கன்னியின் செயலைக் கண்டாள். சாய்ந்து துவளும் அசோகின்தளிரை அவள் தன் காதுகளிற் செறுகினாள். செறுகவே, அசோகந்தழையின் செவ்வொளி பாய்தலால், அவள் காதுகளில் விளங்கிய நீலம் தன்பாலும் செவ்வொளி (இளவெயில்) படரப் பெற்றதாக விளங்கியது. . - - - மற்றொருத்தி குண்டலம் அணிதலையுடைய தன் அழகிய காதுகளில் குவளைமலரைச் செருகிக் கொண்டாள். அதனைக் கண்ட மற்றொருத்தி, இவள் இம் மலர்களைக் காதுகளிற் o செரீஇனதால் நான்கு கண்களைப் பெற்றாள் என்றாள். அதனைக் கேட்ட ஒருத்தி, அவளுடைய நெற்றியிலே சிவப்புப் பொட்டி னையும் இட்டு, நெற்றிக் கண்ணான இதனையும் கொண்டு, இவள்தான் கொற்றவையாளைப்போல நெற்றிக் கண்ணையும் பெற்றாள்' என்றனள். அவளும் கொற்றவை போலவே அழகுடன் விளங்கினாள். பவள வளையினை ஒருத்தி தன் கையிற் செறித் தாள், அதனைக் கண்ட மற்றொருத்தி, பச்சைக் குவளையினது பசிய தண்டைப் பறித்துத் தான் வளையலாகச் செறித்துக் கொண்டாள். . . . . - ஒருத்தி குளிரிப்பூவால் கண்ணி தொடுத்தாள்; அவளைத் தொடுக்காது நிறுத்துக என்பாளைப்போல, மற்றொருத்தி, மல்லிகை மலரின் இடையிடையே நெய்தலையும் கலந்து மாலை தொடுக்கலானாள், இவ்வாறு பெண்கள் பலரும் போட்டியிட் வையைக் கரையிலே ஆடிக் களித்தனர். - - சொற்பொருள் : மாயிதழ் - கரிய இதழ். மடமாதர் - இளங் கன்னியர். வேய் = மூங்கில் பிண்டி - அசோகம் பவளம் பவளக் கொடி கல்லகாரம் - குளிரிப்பூ வளாய் கலந்து - செந்நீர் வரவு தண்டுத வாத் தாவுநீர் வையையுள் கண்ட பொழுதிற் கடும்புனல் கைவாங்க, நெஞ்சம் அவள்வாங்க, நீடு புனைவாங்க, நேரிழை நின்றுழிக் கண்நிற்ப, நீர்அவன் - தாழ்வுழி உய்யாது தான்வேண்டு மாறுய்ப்ப, 110 ஆயத் துடன்நில்லாள் ஆங்கவன் பின்தொடரூஉத்,