பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- s என்னும் சூத்திரம் உரைக்குமாறுபோல, அகப்பொருட் செய்திகளை நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பொருத்தி அழகுறப்பாடற்கு உரியன கலிப்பாவும் பரிபாடலுமே என்பதன் உண்மை.இவ்விருவகைப்பாக்களையும் கற்றுணர்ந்தார்க்கு நன்கு விளங்கும். . - - - - * பாடப் பெற்றவை இத் தொகைநூலிலுள்ள இருபத்திரண்டு பாடல்களுள் ஆறு பாடல்கள் திருமாலைப் பற்றியவை. அவை 1, 2, 3, 4, 13, 15ஆம் பாடல்களாகும். இஃதன்றிப் பரிபாடற் பகுதியிலுள்ள பாடல்களுள் ஒன்றும் திருமாலைப்பற்றியதாகும். இவ்வகையில் திருமாலைப்பற்றிய எட்டுப்பாடல்களுள் ஏழு பாடல்களை நாம் பெற்றுள்ளோம். பொதுவாகத் திருமால் என்றாலும், இருங்குன்றத்துக் கோயில் கொண்டிருக்கும் திருமால்ையே இச் செய்யுட்கள் போற்றுகின்றன. இவற்றை இளம்பெரு வழுதியார், கடுவன் இளவெயினனார், கீரந்தையார், நல் எழிநியார் என்னுஞ் சான்றோர்கள் பாடியுள்ளனர். தொகுப்பின் முதல்நான்குமே திருமாலைப் பற்றியதாக அமைந்திருப்பது. திருமால் வணக்கச் சிறப்பைக் காட்டும். - - செவ்வேளைப்பற்றிக் கிடைத்துள்ள பாடல்கள் எட்டா கும். அவை5, 8,9,14,17,18,19, 21ஆம் பாடல்களாகும். அவற்றைப் பாடியவர்கள் நல்லந்துவனார், கடுவன் இனவெயினனார், குன்றம்பூதனார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழுசியார் என்போர். இவர்களுள் குன்றம் பூதனார் மட்டுமே இரண்டு பாடல்களைப் பாடியுள்ளனர். செவ்வேட்கு உரிய முப்பத்தொரு பாடல்களுள் இவ்வெட்டுப் பாடல்களே கிடைத் தன. எஞ்சியவை மறைந்தன. வையை பற்றிய இருபத்தாறு பாடல்களுட் கிடைத்தவை (8+1) ஒன்பது பாடல்கள். இவற்றைப் பாடியோர் நல்லந்துவனார், கரும்பிள்ளை பூதனார், நல்அழுசியார், நல்வழுதியார், மையோடக் கோவனார் ஆகியோராவர். மதுரையைப்பற்றிய நான்கும், காடுகிழாட்குரிய ஒன்றும் முற்றவும் கிடைத்தில. - - - பரிபாடற் காலம் இப் பரிபாடற் செய்யுட்கள் எழுந்த காலம் சங்க காலத்தை யொட்டியதாகும் எனவும், கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட தாகும் எனவும் ஆய்வாளர் தம்முள் வேறுபடுவர். இக்கால எல்லையைப் பற்றிய சிக்கல்களை ஆராய்ச்சிப் பெரியார்களுக்கு விட்டுவிடுவோம். நாம் நூலின் நயத்தை மட்டும் கற்று இன்புறலாம் என்பதே எம் கருத்தாகும். ஆனால், சிறந்த வானிலை ஆராய்ச்சியாளரும், தெளிந்த தமிழ் ஆங்கிலப் புலமையுடை