பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - - பரிபாடல் மூலமும் உரையும் தாயத் திறமறியாள் தாங்கித் தனிச் சேறல் ஆயத்திற் கூடு என்று, அரற்றெடுப்பத் தாக்கிற்றே சேயுற்ற கார்நீர் வரவு: - பாய்ந்து செல்லும் நீரைக் கொண்டது வையை , அதனுள், வேழத்தண்டைத் தழுவியபடி நீந்திக் களித்தான் ஓர் இளைஞன். நீந்திச் சென்றபொழுதிலே கரைக்கண் தன் ஆயத்தாரோடும் நின்றாளான கன்னி ஒருத்தியை அவன் கண்டான். கண்ட பொழுதில், அவள் அவன் நெஞ்சத்தைத் தன்பால் இழுத்துக் கொண்டாள். கடுவேகத்தோடு செல்லும் புனலானது, அவன் கைகளை நெகிழ்த்து, அவன் பற்றியிருந்த புணையைத் தன்பால் இழுத்துச் செல்லத் தொடங்கியது. நேரிழையாளான அவள் நின்றவிடத்திலேயே தன் கண் சென்று நின்றுவிட, நீர் அவன் விரும்பியபடி அவளிருந்த இடத்திற்கு அவனைக் கொண்டு செலுத்தாது, தான் விரும்பிய படி தன்போக்கிலேயே இழுத்துச்செல்ல முயன்றது. அதனைக் கண்டதும், அந் நங்கை ஆயத்துடன் நிற்க இயலாதவளாயினாள். அவன் பின்னாகத் தொடர்ந்து போவாளைப் போலக் கரைவழியே தொடர்ந்து ஒடத் தொடங்கினாள். அவள் தாய் அதனைக் கண்டாள். தன் மகளின் நெஞ்சத்தை அவன் கவர்ந்த அந்த நிலையை அவள் அறியாள். அதனால் அவள் போக்கைத் தடுப்பாளாகத், தனியேசெல்லற்க, ஆயத்தோடும் சென்று சேர்ந்திரு' என்று கூவினாள்.அக் கூவலைக் கேட்ட அக்கன்னியும் செய்வதறியாது நின்று அழலானாள். இவ்வாறு காதலரின் உள்ளங்களை வருத்துவது, செந்நிறமுற்ற கார்காலப் புதுப் புனலின் வரவு. வையையே இதுதான் எதனாலோ? சொற்பொருள் : தண்டு வேழத் தண்டு; வாழைத் தண்டெனினும் ஆம் கைவாங்க கையைப் பறிக்க தாழ்வுழி - விரும்பிய இடத்து: அஃதாவது தலைவி நின்ற அவ்விடத்து. தாங்கி தடுத்து அரற்று எடுப்ப - அழ. வேண்டித் தொழுதார் - நீதக்காய் தைந்நீர் நிறந்தெளிந்தாய் என்மாரும்: 115 கழுத்தமை, கைவாங்காக் காதலர்ப் புல்ல விழுத்தகை பெறுகென வேண்டுதும் என்மாரும்; பூவீழ் அரியிற் புலம்பப் போகாது யாம்வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்; - - - கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் * 120 மழவீன்று மல்லல்கேள் மன்னுக என்மாரும்; -