பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (11) 125 "தைந்நீரே! நீதான் யாம் நீராடுதற்கேற்ற தகுதியினை உடையை. நின் நிறம் த்ெளிந்தாயா யுள்ளனை என்று கூறுவார் சிலர். எம் கழுத்திடத்தே பொருந்திய கைகளை வாங்காமல், எம் காதலர் எம்மை எப்போதும் தழுவியிருக்குமாறு, யாம் சிறந்த பேற்றினைப் பெறுவேமாக என நின்னை வேண்டிக் கொள்ளு கின்றோம் என்பார் சிலர். பூவிடத்தே வீழ்ந்த வண்டைப்போல், யாம் வருந்துமாறு எம்மைத் தனியாக விட்டுச் செல்லாது, யாம் விரும்பும் காதலர் எம்பாலேயே என்றுமிருக்கும் இன்பத்தையாம் அடைவோமாக என்று வேண்டுவார் சிலர். 'கிழவர் கிழவியர்' என்ற எம்மை எவரும் பழித்துக் கூறாதபடி, ஏழாம் பருவத்தின் எல்லையினும், யாம் இவ்விளமையினையே பெற்றேமாய்ச் செல்வமும் சுற்றமும் பொருந்த வாழ்வதற்கு அருள்வாயாக’ என வேண்டுவார் சிலர். - சொற்பொருள் : விழுத்தகை சிறந்த பேறு. அரி - வண்டு. புலம்ப தனித்துவருந்த வீழ்வார் விரும்பப்படுவாரான காதலர். ஏமம்-இன்பம் ஏழ்-ஏழாம் பருவமான முதுவைப்பருவம்.சேயுற்ற -செந்நிறம் உற்ற. - ,س - விளக்கம் : இதனாற் கன்னியரே யன்றியும், மணந்து தம் காதலரோடு கூடியின்புறுவாரான மங்கையரும், தம் காதலர் தம்மைப் பிரதியாதிருப்பாராகவென்று, தைந்நீராடி நோன்பு பூண்பர்என்பது காணப்படும். வண்டினம் காண்மின் கண்டார்க்குத் தாக்கணங்கிக் காரிகை காண்மின் பண்டாரம் காமன் படையுவள் கண்காண்மின்! நீ னெய்தாழ் கோதை யவர்விலக்க நில்லாது பூஆது வண்டினம் யாழ்கொண்ட கொளைகேண்மின் 125 கொளைப்பொருள் தெரிதரக் கொளுத்தாமற் குரல் கொண்ட கிளைக்குற்ற உழைச்சுரும்பின் கேழ்கெழுபாலை இசையோர்மின்! பண்கண்டு நிறனெய்தாப் பண்தாளம் பெறப்பாடிக் கொண்டஇன் னிசைத்தாளம் கொளைசீர்க்கும் விரித்தாடும் தண்தும்பி இனம்காண்மின் தான்.வீழ்ப் நெரித்தாளை 130 முனைகெழு சினம்நெஞ்சின் முன்னெறிந்து பின்னும் கனைவரல் ஒருதும்பி காய்சினத்து இயல்காண்மின்! தன்னைக் கண்டார்க்குத் தாக்கி வருத்தும் அணங்கைப் போல நோய் செய்பவள் இவ்வழகியாள் இவளைக் காணுங்கள்: காமதேவனின் பண்டாரமும் படையுமாக அமைந்த இவள் கண்களைக் காணுங்கள்! தேன்சொரியும் மாலையைப் பெண்கள் விலக்கிய போதும், தாம் விலகி நில்லாவாய், அவர் அணிந்துள்ள