பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பரிபாடல் மூலமும் உரையும் பூக்களின்கண் மொய்த்துத் தேனுண்ணும் வண்டினம், யாழிசை போன்று இசைக்கின்ற ரீங்காரப் பண்ணைக் கேளுங்கள், பாட்டிற் கொள்ளப்படும் பொருளானது கேட்பாருக்கும் தெளிவாகுமாறு கொண்டு பாடாமற், குரல் கிளை உழை என்னும் மரபினைக் கொண்டு பாடும், வண்டினம் இசைக்கும் பாலைப்பண்ணின் இசையமைதியைக் கேளுங்கள். பண்ணைத் தெரிந்து, பண்ணின் திறத்தைப் பெற்று, பண்ணின் தாளத்திற்கும் பொருந்தப் பாடித், தாம் மேற்கொண்ட இன்னிசைக்கும், பொருந்திய தாளத்திற்கும் ஏற்றபடி, தம் சிறகை விரித்தாடும் தண்ணிய தும்பிக் கூட்டங்களையும் காணுங்கள். தான் விரும்பி மொய்த்த மலரினை நெரித்தானை, போர்முனையிடத்துப் பொருந்திய சினத்தோடு கூடிய நெஞ்சத்தாய் முதற்கண் தாக்கிப், பின்னும் தாக்குவதற்கு விரைந்து வருதலையுடைய ஒரு தும்பியது, சுடுசினத்தினது. தன்மையைக் காணுங்கள். * சொற்பொருள் : காரிகை - அழகி. பண்டாரம் - கருவூலச் சாலை. காமன் படை - மலரம்புகள். நீல்நெய் - தேன். உவள் முன்னைச் சுட்டு முன்னுள்ள ஒருத்தி கொளை பாட்டு குரல், கிளை, உழை-பாட்டின் அமைதிகள். முனை-மாறுபட்டு எதிரும் போர் முனை. எறிந்து - தாக்கி, கனைவரல் - விரைந்து வரல். அதன்கண் வரும் யாழிசைப் பகுதிகட்குரிய தெளிவான பொருளைச் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையுட் காணலாம். எப்பிறப்பினும் அமைக! என வாங்கு, - இன்ன பண்பின் நின்தைந்நீராடல் - மின்னிழை நறுநுதல் மகள்மேம்பட்ட 135 கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம - - இன்னியல் மாண்தேர்ச்சி இசைபரி பாடல் முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம் மறுமுறை அமையத்தும் இயைக - நறுநீர் வையை நயத்தகு நிறையே! - 140 என்று இவ்வகையாக, இனிய பண்பினையும், இனிய இசையினையும் கொண்ட மக்களின் தைந்நீராடலும் திகழும். பரிபாடலால் புகழ்பெற்ற வையைப் பெண்ணே முற்பிறவியிற் செய்த தவத்தால் இப்பிறவியில் நின்னைச் சேர்ந்து தைத் நீராடுகின்ற இப்பேற்றினைப் பொருந்தினேம். மின்னைப் போன்று ஒளிரும் அணிகளையும் நறிய நுதலையும் கொண்டா ளான ஒருத்தியது, மேம்பட்ட, கன்னிமை கணியாக் கைக்கிளை யாகிய காமச்செவ்வியின் இனிய இன்பத்தைத் தரவல்லது, நின்பால் ஆடும் தைந்நீராற் பெறுகின்ற இன்பம். நறுநீர்