பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : ೧೧ುಣರು (12) - 127 வையையே யாம் விரும்பத்தகுந்த நிறைவோடுங்கூடிய இந்தப் பேறானது எம் மறுபிறவிக் கண்ணும் எமக்குக் கைகூடுவதற்கு அருள்வாயாக! - சொற்பொருள் நுதல் நெற்றி கைக்கிளை - ஒருதலைக் காமம் மறிமுறை மறுபிறவி நின் நிறைந்த நீர் - விளக்கம் : தைந்நீராடும் பெண்கள் பிறவிதோறும் மதுரையிற் பிறந்து வையையில் ஆடி மகிழ்தலை விரும்பியவராக வையைத் தெய்வத்தை வேண்டுகின்றனர். இவ்வாறு பாட்டு முடிகின்றது. இதனைக் கேட்டலுறும் தலைவன், தோழியது பாட்டின் பொருளை அறிந்து, தானும் களிப்படைவான் என்று கொள்க. - . . . -. பன்னிரண்டாம் பாடல் வையை (12) பாடியவர் : நல்வழுதியார் பண் வகுத்தவர் : நந்நாகனார்; பண் : பண்ணுப் பாலையாழ். தலைவன் ஒருவன், தன் தலைவியிடத்தே, கார்கால வரவிற்கு முன்னர் மீண்டு வருவதாகக் கூறிப் பிரிந்து, வினைமேற் சென்றிருந்தான். அவளும், அவன் குறித்த காலத்தின் வரவு வரை தன் பிரிவுத்துயரைப் பொறுத்திருந்தாள். கார்காலத் தொடங் கிற்று மழை பெய்து வையையில் புதுநீரும் வந்தது. ஆனால், அவனோ மீண்டும் வந்திலன். அவள் துயரம் கரை கடந்து பெருகு கின்றது. அதனைக்கண்டு அவள் தோழியும் வருந்துகின்றாள். இந்நிலையில், அத் தலைவன் திரும்பி வருகின்றான். வையைக் கரையின்கண் நின்றபடி, தன்னுடன் வந்தாரோடு ஏதோ பேசியபடி நிற்கின்றான். அவனைக் கண்டாள். அவ்வேளையில் அவ்விடத்திற்கு வந்தாளான தோழி, வையைப் புனலாட்டைக் குறித்துப் புகழ்வாளைப்போலத், தலைவன் கேட்டுத் தன் பிழையை உணருமாறும், தலைவியிடத்தே விரையைச் செல்லு மாறும், இவ்வாறு கூறலானாள். அவளது நுட்பமான அறிவுத் திறத்தை உளங்கொண்டு நல்வழுதியார் இப் பாடலைப் பாடுகின்றனர். - - தீநீர் வையை! வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி விளிவின்று கிளையொடு மேன்மலை முற்றித் தளிப்ொழி சாரல் ததர்மலர் தாஅய் ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்