பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 嚼 பரிபாடல் மூலமும் உரையும் அகரு வழைஞெமை ஆரம் இனையத் 5 தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி . - நளிகடல் முன்னி யதுபோலும் தீநீர் வளிவரல் வையை வரவு: சைய மலையிலே மழை பெய்ய, மழைநீர் மரங்களையும் மலர்களையும் தன்னோடு கொண்டதாக, வையையிடத்தே பெருகி வரலாயிற்று. இதனை இப் பகுதி கூறுகின்றது. காற்றால் மோதப்பட்ட மேகங்கள், மின்னலையும் இருளையும் பரப்பிக் கொண்டு, தம் கூட்டத்தோடும் திரண்டுசென்று, மலையின் மேற்புறத்தைச் சூழ்ந்துகொண்டன. அடுத்து இடையீடில்லாதபடி மிகுதியான பெயலையும் பெய்யத் தொடங்கின. அப்பெயலால் மலைச்சாரலிடத்துள்ள இலை களையும் பூக்களையும் உதிர்த்தன. உதிர்ந்த அவற்றோடு கலந்த படி மழைநீர் கீழேநோக்கிச் செல்லத் தொடங்கியது. ஒளி விளங்கும் படப் புள்ளிகளைக் கொண்டதும், அச்சம்பொருந்திய தன்மையைக் கொண்டதுமான நாகத்தின் பெயரையுடைய நாகமரம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் என்னும் இவைபோன்ற மரங்கள் வருந்துமாறு தாக்கியபடி நீர் சென்றது. தகரமும், ஞாழலும், தாரமும் ஆகிய மரங்களைச் சாய்த்துச் சுமந்து கொண்டு சென்றது. இவ்வாறு இனிய நீரையுடைய காற்றோடு கலந்துவரும் வையையின் வரவானது, செறிந்த கடல் பொங்கி எழுந்து வருவதுபோல் இருந்தது. - சொற்பொருள் : வளி - காற்று. வான் - மேகம், வானமும் ஆகும். விளிவின்றி-இடையீடின்றி. கிளை - கூட்டம் தளி - மழை. ததர் - உதிர்ந்த மலர். நாகம் - நாகப்பாம்பு; நாகமரம்; பெயரொற்றுமைபற்றி நாகப்பாம்பினது தன்மையை இதற்கும் உரிமையாக்கிக் கூறினார். அகரு - அகில். வழை - சுரபுன்னை. ஆரம் - சந்தனம். இனைய வருந்த தாரம் - அரிதார மரம். - நீராடச் செல்வார் - வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர்தாய் அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு; 10 மின்னவிர் ஒளியிழை வேயு மோரும், - பொன்ண்டர்ப் பூம்புனை திருத்து வோரும். அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் புகைகெழு சாந்தம் பூசு வோரும், கார்கொள் கூந்தற் கதுப்பமைப் போரும், - 15 வேர்பிணி பன்மலர் வேயு மோரும், - புட்டகம் பொருந்துவ புனைகு வோரும், கட்டிய கயிலணி காழ்கொள் வோரும்.