பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - பரிபாடல் மூலமும் உரையும் இளைய குதிரைகளின் மேலேறினர் சிலர். அன்னத்தின் பெரும்படை போன்றோரான பெண்களுட் சிலர் பிடியானைகள் மேல் ஏறிக்கொண்டனர். பெண்கள் இவ்வாறு வையையை நோக்கிப் புறப்பட ஆடவரும், விரையச்செல்லும் குதிரைகளைச் செலுத்திச் செல்வாரும், களிற்றின்மேலாக அமர்ந்து செல்வாரும், தெளிந்த ஒலியைக் கொண்ட மணிகளைக் கொண்ட நெடுந்தேர் களின்மீது ஏறியமர்ந்து, முட்கோலாற் குத்திக் குதிரைகளை விரையச் செலுத்திச் செல்வோருமாகத் தாமும் புறப்பட்டனர். சொற்பொருள் : பொருஉம் மோதித் தாக்கும். வான் மலர் - உயர்ந்த மலையிடத்து மலர்கள். அந்தண் புனல் - அழகும் தண்மையும் கொண்ட புனல் வேய்தல் பூட்டுதல் முற்ற உட்லை மறைத்தல் பற்றி வேய்தல் என்றனர். அடர் - தகடு, கார்கொள் கார்மேகத்தின் நிறத்தைக் கொண்ட கதுப்பு - குழல், வேர் வெட்டிவேர். புட்டகம் - புட்ைவை. கயில் கொக்கி கண்ணடி - கண்ணாடி, வயக்கி - விளக்கி; துடைத்து. துவர் - துவரை யுடையது; பாக்கு கைவளை இடுதற்கும், தோள்வளை தொடு தற்கும் பொருந்தியது என்பதனை, இடுவளை தொடுவளை’ என்னும் சொற்களால் அறிக. ஒசனை - ஒரு யோசனை தூரம்; காதவழி என்பதும் ஆம். மடமா - இளைய குதிரை. கடுமா விரையச் செல்லும் குதிரை. மாமுள் - குதிரையை ஒட்டுதற்குரிய தாற்றுக்கோல். - - விளக்கம் : நீராடச் செல்லலுறும் மகளிரும் தம்மை வகைவகையாகப் புனைந்து செல்வர் என்கின்ற பெண்மைப் பண்பினை இப்பகுதி காட்டுகின்றது. - கேட்டன. சிலசில விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி 30 ஆடல் தலைத்தலை சிறப்பக் கூடல் உரைதர வந்தன்று வையை நீர், வையைக் கரைதர வந்தன்று காண்பவ ரீட்டம்; நிவந்தது நீத்தம் கரைமேலா; நீத்தம் கவர்ந்தது போலும் காண்பவர் காதல்; முன்துறை நிறையணி நின்றவர் மொழிமொழி ஒன்றல பலபல உடனெழுந்தன்று; அவை எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை கில்லா ; கேள்வி கேட்டன. சிலசில ஒத்த குழலின் ஒலியெழ முழவிமிழ் 40 மத்தரி தடாரி தண்ணுமை மகுளி r , , ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேரிறை முன்கையால் அத்தக அரிவையர் அளத்தல் காண்மின்! 35