பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏 132 - பரிபாடல் மூலமும் உரையும் முதலில் வந்தவர், பிந்தி வந்தார்க்குத் தாம் நீராட வந்து நின்றபோது கேட்டவற்றுள் சிலவற்றை இவ்வாறு உரைக் கின்றனர் : உண்டான்; அதனாலே நம்மைக் கைவிட்டான்' என்று தன் கணவனை வெறுத்து ஊடியிருந்தாள் ஒருத்தி. வையையிற் புதுவெள்ளம் புதுவருவாயாகிய பெருவெள்ளமாக வந்தது. அதன்கண் நீராடக் கரிய பிடியானையின்மீது அதன் உயரமான முதுகிடத்தே தன் கணவனோடு ஏறியமர்ந்து வருகின்றாள் அவள். நாணத்திற் குறைவிலாதவளான அந் நங்கையைக் காணுங்கள் என்று, ஒருத்தியைக் காட்டிச் சிலர் கூறினர். கூட்டத்துள் நின்ற பூங்கொம்பினைப் போன்றாளான ஒருத்தியின், குவிந்த மார்பகத்தையே ஒருவன் பார்த்தபடி யிருந்தான்.அவனைக் காட்டி, இவன் ஓட்டை மனத்தான்; சற்றும் மனவுறுதி இல்லாதவன் என்று கூறி, நகையாடினர் சிலர். வழிப்போக்கனான ஒர் இளைஞனைக் கண்டாள். அவன் இவளுக்குக் கையுறையாக யாதும் தந்ததும் இலன். இவள் காதலை விரும்பிப் பணிந்துவந்து யாதும் சொன்னவனும் இலன். எனினும், இவள் அவன்பால் அன்புற்றாள். அதனால், தன் நிறம் மாறுபட்டாள். வழிச் செல்வானான அவன் பின்னாகவே தன் நெஞ்சத்தையும் போக்கினாள். பெண்டிர், ஒருவன்பால் அன்புற் றாலும், தம் நிறையுடைமை அழிவதற்கு அஞ்சியேனும் அதனைக் கைவிடவேண்டாமோ என்று, வழிபோக்கன் ஒருவனை விரும்பி. மெலிந்தாள் ஒருத்தியைக் காட்டிச் சிலர் கூறினர். 'இவள் அணிந்திருந்த முத்தாரத்தையே பார்த்தான்; அடுத்து இணையாக நெருங்கிய இவள் மார்பகங்களையே நோக்கினான்; அங்ங்னம் பார்த்தானெனக் கண்டும், அவனைக் கண்டு நாணாதாளாயுள்ளாள் இவள் என ஒருத்தியைச் சுட்டிச் சிலர் கூறினர். - - சொற்பொருள் : நயன் - தன்மை. தோள்நலம் தழுவிப் பெறுகின்ற இன்பம், யாணர் - புதுவருவாய் இரும்பிடி - கரிய பிடி பெரிய பிடி. சேண வெரிந் உயர்ந்த முதுகு கோட்டி - கூட்டம்; கோஷ்டி கொம்பர் - கொம்பு போன்ற பெண். நீத்தாள் - போக்கினாள். நெறி - வழி. நிறை - மனநிறையாகிய செப்பம். ஆரம் - முத்தாரம் நாரிகை - பெண். - வல்லது புனல் அமிர்தன நோக்கத்து அணங்கொருத்தி பார்ப்பக் கமழ்கோதை கோலாப் புடைத்துத் தன்மார்பில் தோழி! நன்மையற்றாளாகிய பரத்தையின் தோளின் பத்தை