பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ωινιακά και ευαια) 133 இழையினைக் கையாத்து இறுகிறுக்கி வாங்கிப் பிழையினை என்னப் பிழையொன்றும் காணர்ன் 60 தொழுது பிழைகேட்கும் தூயவனைக் காண்மின் பார்த்தாள் ஒருத்தி நினையெனப் பார்த்தவனைப் பொய்ச்சூளாள் என்பது அறியேன்யான் என்றிரந்து மெய்ச்சூள் உறுவானை மெல்லியல் பொய்ச்சூளென்று ஒல்லுவ சொல்லா துரைவழுவச் சொல்ல 65 உறைத்தும் செறுத்தும் உணர்த்து வானைப் புல்லாது ஊடிப் புலந்து நின்றவள் * . . பூவெழில் வண்ணநீர் பூரித்த வட்டெறிய வேலெழில் உண்கண் எறிநோக்கம் பட்டபுண் பாய்குருதி சோரப் பகையின்று உளஞ்சோர 70 நில்லாது நீங்கி நிலஞ்சோர அல்லாந்து - மல்லார் அகலம் வடுவஞ்சி மம்மர்கூர்ந்து எல்லாத் துனியும்இறப்பத்தன் காதலன் நல்லேர் எழிலாகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் வல்லதால் வையைப் புனல்; 75 "தேவமகளைப் போல அழகுடையாள் ஒருத்தி, அமுதைப் போலக் கனிந்த நோக்கத்தைத் தன் தலைவன்மீது செலுத்தக் கண்டாள், அவன்தலைவி. கண்டதும், அவள் சினங்கொண் டாள். மணங்கமழுகின்ற மாலையினைத் தன் கைக்கோலாகப் பற்றி, அவனைப் புடைத்தாள். தன் மார்பிடத்துப் பொன்னரி மாலையை எடுத்து, அவன் கைகளை மிகவும் இறுக்கமாகப் பிணித்தாள். பின்னும் அவனைப்பற்றி இழுத்தவளாக, நீ தான் அவனை ஏமாற்றினை போலும்? நீ என்ன பிழையினைச் செய்தாய்? என்று சீறினாள். அவனோ, தன்பாற் பிழையாக ஒன்றையும் செய்தறியாத தூய காதலன். எனினும், அவன் தன் காதலியைத் தொழுது, நின் சினத்தினுக்கு யான் செய்த பிழைதான் யாதோ? எனப் பணிவோடு கேட்கின்ற அதனைக் காணுங்கள்.” - - - - - நின்னை ஒருத்தி காதலோடும் பார்த்தாள்' என்று தலைவி சொன்னாள். அவள் என்னாற் பொய்ச்சூளுரைத்து ஏமாற்றப் பட்டவள் அல்லள்; அவளை யான் கண்டும் அறியேன்” என்று கூறி, அவன் தலைவியை இரந்து நிற்பானாகி, மெய்யாகச் சூளு ரைக்கின்றேன்’ எனவும் கூறினான். அவ்வாறு மெய்யாகவே ஆணையிட்டுரைத்த அவனைப் பொய்யாணை இடுகின்றவன்' என்று கருதி, அவள் மேலும் சினங் கொண்டாள். அவன் மனம் பொருந்துமாறு இனிய சொற்களைச் சொல்லாது, பிழைபட்ட சொற்களைக் கூறி, அவனை ஏசினாள். அவற்றைக் கேட்ட பின்னரும், அவன் அவளை வெறுத்திலன். தான் சொன்னதையே வலியுறுத்தியும், சினத்தோடு கூறியும், அவளைத் தெளிவிக்க & · ŠJ