பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 _ பரிபாடல் மூலமும் உரையும்

யோருமான, காலஞ்சென்ற L. D. சாமிக்கண்ணுப் பிள்ளை யவர்கள், பதினோராம் பாடலுட் காணப்படும் வானிலைக் குறிப்புகளை ஆராய்ந்து, கி.பி. 634 அது குறிக்கும் காலம் என்று காட்டியுள்ளார்கள். சிலர் இதற்கு முற்பட்ட காலமென்பார்கள் அவர்கள் வகுத்துள்ள காலம் கி.மு. 16 ஆகும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட கி.பி. மூன்றாம் நூற்றாண்டை டாக்டர் மா. இராசமாணிக்கனார் போன்ற தமிழ் ஆராய்ச்சி வல்லார்கள் கொள்வார்கள். இக் கால ஆராய்ச்சி எவ்வாறாயினும், இன்றைக்கு ஏறக்குறைய 1700 ஆண்டுகட்கு முற்பட்டது இத்தொகைநூல் என்பது தெளிவு. அந்நாளிலேயே தமிழ் நன்மக்களது வாழ்வியல் எத்துணை விழுமிய நிலையிலே திகழ்ந்ததென்பதையும் இப் பாடல்களாற் காணலாம். வடமொழிக் கதைகள் . பிற சங்க நூற்களைப்போல அல்லாமல், இப் பரிபாடல் வடமொழிப் புராணக் கதைகள், வடபுலத்து வழிபர்ட்டு மரபுகள் முதலியவற்றையும் மிகுதியாகக் கொண்டுள்ளன. தமிழர் வடமொழியாளர் தொடர்பு பலவாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்டது. இடைச்சங்க காலத்துக்கு முன்பாகவே அவர்கள் சிறுகச்சிறுகத் தமிழகத்தில் வந்து பரவத் தொடங்கினர். அவர்களின் வழிபாட்டு மரபுகளும் அவர்களோடு சிறுகச்சிறுகத் தமிழகத்தில் வந்து பரவின. திருமால், செவ்வேள் ஆகியோரைப் பாடுதற்கு முற்பட்ட சான்றோர்கள், அவர்கள் தொடர்பான வடமொழியாளர் வழிபாட்டு மரபுகளையும் ஏற்றுக் கொண்டே பாடுவாராயினர். இதனை நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை யிலும் காணலாம். இக்காலத் தமிழ் அறிஞருட் பலர், தமிழா ராய்ச்சி நூற்களுள், எங்கணும் ஆங்கிய நூலாசிரியர் கருத்துக் களையே மிகுதியாகப் பெய்து செல்லும் மனநிலையை இங்கே கருதினால், இவ்வாறு தாம் கற்ற பிறமொழி நூற்கருத்துக்களைத் தம்மொழி நூற்கண்புகுத்துதல் என்பது, படித்தாரிடைப் பரவலாக இருந்துவந்த வரும், ஒரு மன நோய் என்றே கருதலாம். மலைநம்பி கோயில்

அழல் புரை குழைகொழு நிழல்தரு பலசினை ஆலமும் கடம்பும் நல்லாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் என வரும் தொடர்கள், பழந்தமிழர், தெய்வங்கள் உறை. பதிகளாகக் கொண்ட பல்வேறு இடங்களைச் சுட்டிக் காட்டு கின்றன. இவற்றுள் கால்வழக் கறுநிலைக் குன்றமும் என்றலால், திருமாலுக்குக் குன்றுகளின் மேலும் திருக்கோயில்கள் பண்டை