பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - - - பரிபாடல் மூலமும் உரையும் - முயன்றான். அதனாலும், அவள் மனந்தெளிந்தாள் அல்லள். அவனைத் தழுவாது ஊடியவள்ாகப் புலந்து நின்றனள். பூவின் மணமும் அழகும் பொருந்திய வண்ணநீரால் நிரப்பப்பெற்ற வட்டினை அவன் மார்பின்மீது வீசி எறிந்தனள். அவ் வட்டுப் பட்டு, அதிலுள்ள சாயநீர் அவன் மர்ர்பை நனைத்து, உடலின் மேலும் வழிந்தோடியது.வேலின் அழகைக் கொண்டமையுண்ட கண்களை உடையாளான அவளது தாக்கிய நோக்காகிய வெலினாற்பட்ட புண்ணிடத்திலிருந்து பாயும் செங்குருதியைப் போல, அச்சாயநீர் வழிந்தது காணப்பெற்றது.ஆனாலும், அவன் அவள்மேற். பகை கொண்டானல்லலன். ஆனால், உள்ளம் சோர்ந்தவனாக, அவளருகே நில்லாது அகன்று, தரையிடத்தே வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டதும், அவள் சினமெல்லாம் பறந்தது. அவள் வருந்தினாள் மற்போர் செய்வானாகிய அவனது மார்பிடத்து விளங்கிய வடுவினுக்கு அஞ்சினாள் மயக்கங் கொண்டாள். எல்லாக் கோபமும் ஒழிந்துபோகத் தன் காதலனின் சிறந்த அழகைக் கொண்ட மார்பினைத் தழுவிக் கொண்டாள். இவ்வாறு, ஊடியவரையும் ஒன்றாகச் சேரச் செய்தல் எக்காலத்தும் வையைப் புனலுக்குரிய வல்லமையே யாகும்" என்று சிலர் கூறினர். சொற்பொருள் : அமிர்து அமுதம்: உண்டாரை உயிர் தளிர்க்கச் செய்வது. அணங்கு - அழகால் பிறரைத் தாக்கி வருத்தும் தேவமகள். யாத்து - கட்டி. ஒல்லுவ இசை யும் சொற்கள். உரை வழுவச் சொல்லல் - குற்றஞ்சாற்றிப் பழித்தி , உணர்த்தல் வலியுறுத்தல், மம்மர் - மயக்கம். ஏர் எழில் - பேரழகு. குருதி யாறு எனவாங்கு, - - மல்லிகை மெளவல் மணங்கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் - குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி நல்லினர் நாகம் நறவம் சுரபுன்னை 80 எல்லாம் கமழும் இருசார் கரைகலிழத் தேறித் தெளிந்து செறியிருள் மான்மாலைப் பாறைப் பரப்பின் பரந்த சிறைநின்று துறக்கத்து எழிலைத்தன் நீர்நிழற் காட்டும் காரடு காலைக்கலிழ்செங் குருதித்தே 85 போரடு தானையான் யாறு; இவ்வாறெல்லாம் புனலாட வந்தார் பலரும், பலவாறாக ஆடியும் உரைத்தும் மகிழ்வோடு நின்றனர்.