பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - udun-so Spogpin o-somuto ஒன்றாய் மூன்றாவாய்! தன்னுரு உறழும் பாற்கடல் நாப்பண் மின்னவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைநா அருந்தலைக் காண்பின்,சேக்கைத் துளவஞ் சூடிய அறிதுயி லோனும் - . மறமிகு மலியொலி மாறடு தானையால் 30 திறனிகந்து வருஉம் அவருயிர் அகற்றும் விறன்மிகு வலியொலி பொலிபுகழ் புழுதியின் நிறனுழு வளைவாய் நாஞ்சி, லோனும், நானிலம் துளக்கற முழுமுதல் நாற்றிய பொலம்புனை இதழணி மணிமடற் பேரணி 35 இலங்கொளி மருப்பின் களிறும் ஆகி, மூவுருவாகிய தலைபிரி ஒருவனை, தன்னுருவின் வண்ணத்தோடு மாறுபட்டதான பாற் கடலின் நடுவிடத்தே, மின்னொளி பரப்பும் சுடர்மணிகளைக் கொண்ட ஆயிரம் தலைகளை விரித்தபடியிருக்கும், பிளந்த நாக்கையும் அணுகுதற்கரிய தலைகளையும் கொண்டு காட்சிக் கினிதாக விளங்கும், ஆதிசேடனாகிய பாம்பணையின் மேலாகத், திருத்துழாய் மாலையைச் சூடியவனாக, அவன் அறிதுயில் பூண்டிருப்பான். அவனும், மறத்தின் மிகுதியினாலே, பேரொலியோடு, மாறுபட் டாரைக் கொல்லும் பன்டயினையுடைமையால், வரம்பு கடந்து எதிர்த்துவருபவரின் உயிரைப்போக்கும் ஆற்றலில் மிகுந்த வல்லொலியையும், பொலிவான புகழையுங் கொண்ட, புழுதியின் மார்பை உழுகின்றதான, வளைந்த முகப்பைக் கொண்ட நாஞ்சிற் படையை உடையவன் பலராமன்; அவனும், குறிஞ்சியும் மருதமும் நெய்தலுமாகிய நானிலத்தின் நடுக்கமும் நீங்குமாறு, முழுமுதலாகிய அவன் குத்தித் தாங்கிக் கொணர்ந்த, பொன்னாற் புனைந்த பூவிதழ்கள் அணிசெய்யும், மணிபதித்த பொற்றகட்டால் ஆகிய கிம்புரி என்னும் அணி விளங்கும் ஒளி செய்யும் கோட்டினையுடையவராகக் களிறு ஆகியோனாகிய அவனும், ● - என்னுமாறு, ஒருவனாயிருந்தும், மூவேறு உருவங். கொண்டு முதற்கண் பிரிந்து நின்று விளங்கிய பெருமானே! சொற்பொருள் : தன்னுரு - தன்னுருவின் வண்ணமாகிய கருநிறம். நாப்பண் - நடுவிடத்தே. சுடர்மணி’ என்றது நாகமணியை கவைநா - பிளவுபட்ட நாக்கு சேக்கை - படுக்கை அறிதுயில் துயிலும் போதும் அனைத்தையும் அறியும் நிலையிலே இருக்கின்ற வொருதன்மை. திறனிகந்து - வரம்பு