பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் செவ்வேள் (14) 143 நீங்காத வலிமையினையும், சினவாமலே அமைந்த செங் கண்களையும், வெல்லும் போரினைச் செய்யும் செருக்களத்தே பகையை மேம்பட்டு விளங்கும் சக்கரப் படையினையும் உடையோனே! நெருப்பொத்து மலர்ந்துள்ள வெட்சிப்பூவைத் திருத்துழாயின் இடையிடையே இட்டுத் தொடுத்துக் கட்டிய மாலையினைப் பொருந்திய மார்பினை உடையோனே! எம் அன்னையாகவே நினைத்து நின்னடியிணைகளைத் தொழுதேம் பன்முறை அடுத்தடுத்து நின்னடிகளை வணங்கினேம். முன்னும் முன்னும் பல பிறவிகளினும் யாம் செய்த தவத்தின் பயனாக, நின் திருவடிகளை வாழ்த்தினேம். பெருமானே! இனியும் இனியும் வரும் எம் பிறவிகளினும், எம் விருப்பம் நின் திருவடிகளை வணங்கலுறும் இதுவே யாகும் - - + சொற்பொருள் : மைந்து வலிமை, எரி நகை - எரிபோல் மலர்ந்த வெட்சிப்பூ காமம் ஆர்வம் பன்மாண் பன்முறை விளக்கம் : பெருமானிடம் மீண்டும் மீண்டும் அவனைத் தொழுது போற்றுதலாகிய சிறந்த இன்பத்தையே வேண்டு கின்றனர். எல்லாவகை இன்பங்களிலும் சாலச்சிறந்தது நித்திய தேவதரிசனமே என்பது கருத்து. இதனை உணர்ந்து போற்றல் வேண்டும். - +. : + பதினான்காம் பாடல் செவ்வேள் (14) பாடியவர் : கேசவனார்; பண் வகுத்தவர் : கேசவனாரே, பண் ; நோதிறம். - - கார்காலத்து வரவுக்கு முன்பாகவே மீண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன், குறித்தபடி வாரான் ஆயினான். அதனால், தலைவியின் பிரிவுத்துயரம் பெருகியது. அதனைப் போக்கக் கருதினாள் தோழி. முருகனைப் போற்றுவாள்போலப் பாடி, அவன் வருவான் ஆற்றியிரு' என, இவ்வாறு குறிப்பாகக் கூறுகின்றாள். - சுடர்ப் படையோய்! கார்மலி கதழ்பெயல் தலைஇ ஏற்ற நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே , தண்நறுங் கடம்பின் கமழ்தாது ஊதும் வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே , அடியுறை மகளிர் ஆடும் தோளே 5 நெடுவரை அடுக்கத்து வேய்யோன் றனவே , வாகை ஒண்பூப் புரையும் உச்சிய - தோகையார்குரல் மணந்து தணந்தோரை