பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - பரிபாடல் மூலமும் உரையும் நீடன்மின் வாரும் என்பவர் சொற்போன்றனவே , நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன ; 10 மெல்லினர் வேங்கை வியலறைத் தாயின அழுகை மகளிர்க் குழுவை செப்ப ; நீரயல் கலித்த நெரிமுகைக் காந்தள் வார்குலை அவிழ்ந்த வள்ளிதழ் நிரைதொறும் விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றிப் 15 பவழத் தன்ன செம்பூத் தாஅய்க் - கார்மலிந் தன்றுநின் குன்று; போர்மலிந்து சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே! மேகங்கள் பெருமழையினை விரைவோடு பெய்தலைத் தொடங்கின. மழைநீரை ஏற்றதனால் நீரால் மலிந்த சுனைகள் நிறைந்து வழிந்தன; அவற்றிடத்து நீர்ப்பூக்கள் பலவும் இதழ விழ்ந்து மலர்ந்தன. தண்மையும் நறுமணமுங் கொண்ட கடப்ப மலர்களின் மணங்கமழுகின்ற பூந்தாதினை ஊதும் அழகிய வண்டுகளின் ரீங்கார ஒலியானது, பண்ணிசைபோன்று ஒலித்தது. பெருமானின் அடியவராகிய மகளிர் தோளெடுத்து ஆடினர்; அவரது அசைந்தாடிய தோள்கள், நெடுவரைச் சாரலிடத்துள்ள மூங்கிலைப்போல விளங்கின. வாகையது ஒள்ளிய பூவைப்போல விளங்கும் உச்சிக் கொண்டையையுடைய மயில்களின் அகவுதற்குரலானது, மணந்துகொண்ட பின்னர்த் தம் காதலியரைத் தனித்து வாடவிட்டுப் பிரிந்து சென்றவரை நோக்கி, நும் பிரிவை நீட்டியர்தீர்கள், விரைய வாருங்கள் என்று அறவுரை சொல்வாரின் சொற்களைப் போன்று எழுந்தது. புதுமலர்களைக் கொண்ட கொன்றையின் பூச்சரங்கள், பொன் மாலைகளைப் போன்று கிளைகளில் தொங்கின. அழுகை கொண்ட பெண் குழந்தைகளுக்குத் தாய்மார் காட்டிப் புலியெனச் சொல்லி அச்சுறுத்தும் வண்ணம், மெல்லினர்களைக் கொண்ட வேங்கையின் பூக்கள் அகன்ற பாறையிடத்தே உதிர்ந்து கிடந்தன. நீர்க்கு அருகாமையிலே கிளைத்த நெரித்த முகைகளைக் கொண்ட காந்தட் பூக்கள், நீண்ட குலைகளிடையே மலர்ந்த வளவிய வரிசையான இதழ்கள் தோறும், அதனருகேகொடிவிட்டுப் படர்ந்த மென்மைகொண்ட தோன்றியின், பவழம்போல விளங்கும் செந்நிறப் பூக்கள் வீழ்ந்திருந்தன. இவ்வாறாக, நினது திருப்பரங் குன்றத்திடத்தே, வேனிற்காலத்தும், கார்காலத்தின் தன்மையே நிறைந்திருந்தது. போரினை மேற்கொண்டு, சூரனை அவன் சுற்றத்தோடும் அழித்த, ஒளிவிளங்கும் வேற்படையினை உட்ையோனே! இஃது நின் பரங்குன்றின் சிறப்பாகும். -