பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുകേട് * செவ்வேள் (14) 145 சொற்பொருள் : கார் - கார்ப்பருவம். கதழ்வு - விரைவு. பண்ணை போன்றன - பண்ணிசை போன்றன: அடியுறை அடியவரான அடுக்கம் - சாரல். தோகை - மயில். ஆர்குரல் - பெருங்குரல். கலித்த கிளைத்த தோன்றி - தோன்றிப் பூ சூர் - சூரன். மருங்கு சுற்றம். - - - வள்ளிப் பூ நயந்தோய்! கறையில் கார்மழை பொங்கி யன்ன . . - நறையின் நறும்புகை நனியமர்ந்தோயே! 20 அறுமுகத் தாறிரு தோளால் வென்றி - - நறுமலர் வள்ளிப்பூநயந்தோயே! கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந்தேயே! பிறந்த ஞான்றே நின்னை உட்கிச் 25 சிறந்தோர் அஞ்சிய சீருடையோயே! இருபிறப் பிருபெயர் ஈர நெஞ்சத்து ஒருபெயர் அந்தணர் அறன.மர்ந் தோயே! அன்னை யாகலின் அமர்ந்துயாம் நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன்பயம் 30 இன்னு மின்னுமவை ஆகுக - தொன்முதிர் மரபின் புகழினும் பலவே! குற்றமில்லாத கார்காலத்து வெண்மேகங்கள் பொங்கி எழுந்தாற்போல, எழுகின்ற நறுமணப் பொருள்களின் நறும் புகையினை மிகவும் விரும்புகின்றோனே! ஆறு திருமுகங்க ளோடும், பன்னிரு தோள்களோடும் தோன்றி, மணச் செவ்வியாற் பிற நறுமலர்களை வெற்றி கொண்டதாக விளங்கும், வள்ளியம்மையாகிய நறுமலரினை விரும்பியோனே! கணவர் தம்மைத் தழுவியவராகச் சுற்றிக் கொண்டிருக்க, அந்த இன்பம் என்றும் நிலைக்கவிரும்பிய மகளிர், யாழினை மீட்டியவராக நின்னைக் குறித்துப் பாடும் பாட்டினை விரும்புவோனே! நீ பிறந்த அந்நாளிலேயே, நின்னைக் கண்டு நெஞ்சம் நடுக்குற்றுத், தேவர்களெல்லாம் அஞ்சிய சிறப்பினைக் கொண்டோனே! இரு பிறப்பும், இருபெயரும் கொண்டோராகவும், அருள்விளங்கும் நெஞ்சத்தைக் கொண்டோராகவும் விளங்கும், அந்தணர் என்கின்ற ஒப்பற்ற புகழை உடையோரின், அறவாழ் விடத்துப் பொருந்தியிருப்பவனே! அத்தகைய சிறப்பினை நீயாதலால், யாமும் நின்னை விரும்பியவராக, நின் திருவடிகளை அணைந்தணைந்து வழிபடு கின்றேம் பழமையாக முதிர்ந்த மரபினையுடைய நின் புகழினும் பலவாக, நின்னை வழிபடுவார் பெறுகின்ற பயன், இன்னும் இன்னும் பலவாகப் பல்கிப் பெருகுவதாகுக, பெருமானே!