பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - - பரிபாடல் மூலமும் உரையும் ஏத்துகம் சிலம்ப அரிதிற்பெறு துறக்கம் மாலிருங் குன்றம் எளிதிற்பெற லுரிமை ஏத்துகம் சிலம்ப பெருமானே! அங்ங்னம் அரிதாக முயன்று பெறுதற்கு உரியது துறக்கம் ஆகும். அதனை எளிதாகப் பெறுதற்கு உதவவல்லது நின் மாலிருங் குன்றம். ஆகவே, எமக்கு நின்பாலுள்ள உரிமையைக் கூறியவராக, எம் குரல் இம் மலைப்புறமெல்லாம் எதிரொலிக்குமாறு, யாமும் நின்னைப் போற்றிப் போற்றிப் பாடுவேமாக! r}, நினைமின் கேண்மின்! அராவணர் கயந்தலைத் தம்முன் மார்பின் மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி . 20 அலங்கும் அருவி ஆர்த்திமிழ்பு இழியச் சிலம்பாறு அணிந்த சீர்கெழு திருவின் சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம் தாம்வீழ் காமம் வித்துபு விளைக்கும் - நாமத் தன்மை நன்கனம் படியெழ 25 யாமத் தன்மையில் வையிருங் குன்றத்து மன்புனல் இளவெயில் வளாவவிருள் வளர்வெனப் பொன்புனை உடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே! நினைமின் மாந்தீர்! கேண்மின் கமழ்சீர்! மென்மையான தலைகளைக் கொண்ட ஆதிசேடனாகிய பாம்பானவன், அத் தலைகளை உயர்த்து அசைந்தாடியபடி நினக்கு நிழல்செய்து கொண்டிருப்பான். நினக்கு மன்னோனாகப் பிறந்தவன் பலராமன்; அவன் மாரிபினிடத்து வெண்கடப்ப மலர்மாலை விளங்கும். அம் மாலையைப்போல அழகு விளங்கத் தோன்றியதாக அசைந்து வீழும் அருவியானது, மிக்க ஒலியோடு விழும். அவ்வருவி நீரால் சிலம்பாறு அழகுபெறும். அத்தகைய சிலம்பாறு அழகுசெய்திருக்க, அதனால் சிறப்புப் பொருந்தி யுள்ள திருமாலிருஞ்சோலைமலையாகவிளங்குவது நின் குன்றம் தாம் விரும்பிய இச்சைகளை நின் திருவடிக்கண்ணே விதைத்து, விளைவாகிய பெரும்பயனைக் கொள்வார் மக்கள். இதனால் திருமாலெனும் பெயரின் புகழ் உலகெங்கும் எழுந்தொலிக்கின்றது. இத்தகைய அழகிய திருமாலிருங் குன்றி னிடத்தே, நிலைபெற்ற குளிர்ச்சிகொண்ட இளவெயிலானது தன்னைச் சூழ்ந்து நிற்க, நள்ளிரவுத் தன்மைகொண்டடி இருளானது வளர்ந்து நிற்பதுபோலப் பொன்வேய்ந்த உடுக்கை யோடுங் கூடிய திருமாலாகிய பெருமான், கோயில்கொண்டு நிலைபெற்றிருக்கின்றான். . $