பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் (15) 149 . மாந்தர்களே! அப் பெருமானையே நினையுங்கள்! அவன் உறையும் மணம் பொருந்திய திருமாலிருஞ் சோலை மலையின் சிற்பினைக் கூறுவோம்; அதனையும் கேட்பீராக! - சொற்பொருள் : அணர்-நிமிர்ந்து நிற்கும். கயம்-மென்மை. தம்முன் பலராமன். மரா - வெண் கட்ம்பு. தார் - மார்பிடத்து மாலை, அலங்கும் அசையும். ஆர்த்து - ஒலித்தபடி திருவின் சோலையொடு தொடர் மொழி மாலிருங் குன்றம் திருமாலிருஞ் சோலை மலை. நாமத் தன்மை பெயரின் புகழ் நிலை. யாமம் - சிறுபொழுதுப் பிரிவு: இங்கே நள்ளிரவு; குறிஞ்சிக்குரிய சிறுபொழுது. மன்புனல் - நிலைத்த குளிர்ச்சி. வளாவ சூழ்ந்திருக்க வளர்வு ஓங்கி உயர்ந்து நிற்றல் கமழ் சிறப்பு: குன்றைக் குறித்தது. விளக்கம் : பெருமான் தன் முன்னவனோடுங் கூடியவ னாகக் கோயில் கொண்டிருக்கும் அந்தச் சீரிய நிலையினையே நினைமின்; அப் பேறுபெற்ற குன்றின் புகழையே பாடுமின் என்பதாம். " . சீர் மணக்கும் நிறம் விளங்கும் குன்றம்! சுனையெலாம் நீலம் மலரச் சுனைசூழ் 30 சினையெலாம் செயலை மலரக், காய்கனி உறழ, நனைவேங்கை ஒள்ளினர் மலர, மாயோன் ஒத்தவின் னிலைத்தே; - சென்று தொழுகல்லீர்! கண்டு பணி மின்மே! - இருங்குன் றென்னும் பெயர்பரந்த ததுவ்ே - 35 பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது: - கண்டுமயர் அறுக்குங் காமக் கடவுள்; மகமுயங்கு மந்தி வரைவரை பாய், - முகிழ் முயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட, மணிமருள் நன்னீர்ச்சினை மடமயில் அகவக், 40 குருகிலை உதிரக் குயிலினங் கூவப்; - பார்குழல் பாண்டில் இயம்ப அகவுநர் நாநவில் பாடல் முழவெதிர்ந்த தன்ன; சிலம்பிற் சிலம்பிசை ஒவாது; ஒன்னார்க் - கடந்தட்டான் கேழிருங் குன்று: - 45 திருமாலிருஞ்சோலை மலையிடத்துள்ள சுனையெல்லாம் நீலப் பூக்களோடு விளங்கும். அவை பெருமானின் நீல வண் ணத்தை ஒத்திருக்கும். சுனையைச் சூழ்ந்துள்ள சோலைமரக் கிளைகளெல்லாம் செவ்விய பூக்களை உடையவாயிருக்கும்; அவை பெருமானின் பொன்புனை உடுக்கையைப் போன்று விளங்கும். மரக்கிளைகளுள் காய்களும் கனிகளும் பலவகை