பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - பரிபாடல் மூலமும் உரையும் பரவுதும் தொழுதே! கள்ளணி பசுந்துளவினவை, கருங்குன்றனையவை: ஒள்ளொளியவை; ஒருகுழையவை ; 55 புள்ளனி பொலங் கொடியவை ; வள்ளணி வளைநாஞ்சிலவை; சலம்புரி தண்டேந்தினவை; வலம்புரி வய நேமியவை ; வரிசிலை வய அம்பினவை; - 60 புகளிணர்சூழ் வட்டத்தவை ; புகர்வாளவை ; எனவாங்கு, நலம்புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி இதுவென உரைத்தலினெம் உள்ளமர்ந்து இசைத்திறை இருங்குன்றத்து அடியுறை இயைகெனப் 65 பெரும்பெயர் இருவரைப் பரவுதுந் தொழுதே! - "தேன் பொருந்திய பசுமையான திருத்துளவத்தை அணிந்துள்ளனை, கரிய குன்றொத்த நிறத்தை உடையை: வெண்மை பொருந்திய பேரொளியை உடையை, ஒப்பற்ற குண்டலத்தினை உடையை கருடப்புள் அழகுசெய்திருக்கும் வெற்றிக் கொடியினைக் கொண்டனை கூர்மை பொருந்திய வளைந்த கலப்பைப் படையினை உடையை சினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தை உடையை வெற்றி விளைக்கும் சக்கரப் படையை உடையை கட்டமைந்த வில்லோடு வெற்றி பொருந்திய அம்புகளையும் உடையை புள்ளிகளின் ஒழுங்கு சூழ்ந்திருக்க விளங்கும் பாராவளையினை உடையை, புள்ளி கொண்டவாட்படையினை உடையை" எனவெல்லாம். நன்மையை விரும்பியவாறு அழகிய சிறப்பையுடைய, புகழமைந்த வேதம் நின் தன்மை இதுவென உரைத்துள்ளது. அவ்வாறே யாமும் கூறிப் போற்றுவோம், எம் உள்ளத்தும் பொருந்தி நின்று, நின்புகழை இசைத்து, எம்மை வாழ்விக்கும் தலைவனும் நீயே! 'திருமாலிருங் குன்றத்தின் அடிக்கண் பொருந்தி வாழ்தல் எமக்கும் பொருந்துக' என்று கருதிப், பெரும் புகழ்பெற்ற இருவராகிய கண்ணனும் பலதேவரும் ஆகிய நின்னடிகளைத் தொழுது, யாமும் பரவுவேமாக எமக்கும் அருள்வாயாக! சொற்பொருள்: கள் - மது - தேன். ஒள்ளொளி, வெண்மை யாகிய பேரொளி. குழை காதணி வள் - கூர்மை. வரி கட்டு. புகர் - புள்ளி. - விளக்கம் : திருமாலின் படைகளைக் கூறிப் போற்றியது. அவற்றை ஏந்தியோனாகிய அவனையும் நினைந்து போற்றிற்று மாகும்.