பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-வையை (16) 153 பெருமானிடம் அன்புடையார்க்கு, அவன் கோயில் கொண்டிருக்கும் குன்றமும் சிறப்புடையதாக விளங்குகின்றது. அதனையும் போற்றுகின்றனர். இவ்வாறு தம்மால் விரும்பப் படுவாரின் தொடர்பு உடையவற்றையும் போற்றுதல் மக்கள் உள்ளத்தியல்பு ஆகும். - - - - - பதினாறாம் பாடல் வையை (16) பாடியவர் : ஆசிரியர் நல்லழிசியார் பண் வகுத்தவர் : ஆசிரியர் நல்லச்சுதனார்; பண் : பண்நோதிறம். - தலைவியின் ஊடற்சினத்தைத் தணிவித்து, அவளைத் தன் னோடுஞ் சேர்த்தருளுமாறு வேண்டின் தலைவனுக்கு அதனை மறுத்து உரைப்பாளான தோழி, வையையைப் பொற்றுவாள் போலத், தலைவனின் போற்றா ஒழுக்கத்தைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறுகின்றனள். - - - w - கரை - துறை - செறு - கா கரையே, கைவண் தோனல் ஈகைபோன்மென மைபடு சிலம்பிற் கறியொடுஞ் சாந்தொடும் நெய்குடை தயிரின் நுரையொடும் பிறவொடும் எவ்வயி னானும் மீதுமீ தழியும்; துறையே, முத்துநேர்பு புணர்காழ் மத்தக நித்திலம் 5 பொலம்புனை அவிரிழை கலங்கலம் புனல்மணி வலம்சுழி உந்திய திணைபிரி புதல்வர் கயந்தலை முச்சி முஞ்சமொடு தழிஇத் தத்தம் துணையோடு ஒருங்குடன் ஆடும் தத்தரிக் கண்ணார் தலைத்தலை வருமே ; 10 செறுவே, விடுமலர் சுமந்து பூநீர் நிறைதலின் படுகண் இமிழ்கொளை பயின்றன ராடும் களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்; காவே, சுரும்பிமிர் தாதொடு தலைத்தலை மிகஉம் நரந்த நறுமலர் நன்களிக் கும்மே - கரைபொழுகு தீமபுனற்கு எதிர்விருந்து அயர்வபோல்; கானலங் காவும் கயமும் துருத்தியும், தேன் தேனுண்டு பாடத் திசைதிசைப் பூநலம் பூத்தன்று வையை வரவு: - மலையிற் பெருமழை பெய்தது. அதனால் வையையிற் புது வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அவ்வாறு வந்த புது வெள்ளம் தலைப்பகுதியின் மிளகையும், சந்தனமரத் துண்டு களையும், மற்றும் பலவற்றையும் தன்னுடன் கொணர்ந்து, ஆற்றின் கரைகளில் குவித்தது. இதனாற் கரையின் எல்லா