பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ပါur-စ် ဎလဖ္ရစ္ உரையும் விடங்களினும் அப் பொருள்கள் குவிந்து கிடந்தன. நெய்குடை யும் தயிரிடத்திருந்து எழுகின்ற நுரையைப்போன்ற நுரையுடன், அலைகள் எழுந்து கரைகளில் மோதின. அதனால், கரைகளின் எல்லாப் பகுதிகளும் மென்மேலும் அழிவு எய்தியபடியும் இருந்தன. கைவண்மை உடைய தலைவனாகிய பாண்டியன், தன்னை அடைந்தார்க்கு அவர் கேட்பதன் முன்னரே பெரும் பரிசிலை வழங்கி அவரை ஆதரிப்பவன். அவனது கொடைத் தன்மையைப்போல இருந்தது. புது வெள்ளம் கரைகளிற் பலவற்றையும் கொண்டு சேர்த்தது. - நேரொத்த முத்துக்களைக் கோத்தமைத்த முத்துமாலை, தலைக்கோலம் என்னும் முத்தினால் அமைக்கப்பெற்ற அணி, பொன்னாற் செய்யப்பெற்ற ஒளிவிளங்கும் அணிகள், கலங்க லான நீரைப்போல விளங்கும் அழகிய செம்மணி பதித்த அணிகள், இவற்றைப் பூண்டுவரும் வலமாகச் சுழித்த உற்தித் தடங்களையுடையவரும், தம் வீட்டைப் பிரிந்து வந்தவருமான புதல்வர்கள்; அவர்களது மென்மையான தலையுச்சியின் மேல் விளங்கும் முஞ்சம் என்னும் அணிகளுடன் திகழ்ந்தனர். இவர் களனைவருடனும், இவர்கள் தத்தம் துணைவருடன் கல்ந்து ஒன்றுபட்டுத் துறைகளின் ஓரங்களில் நீர்விளையாட்டு ஆடியபடி இருந்தனர். செவ்வரி கருவரி படர்ந்த கண்ணினரான இவர்களது தந்தையின் பரத்தையர்கள், இவர்களைக் கண்டதும், இவர்களை எடுத்தணைப்பதற்கு விரும்பியவராக, இடங்கள் தோறும் வந்து கொண்டிருந்தனர். - இவ்வாறாக, ஆற்றங்கரையை அடுத்திருந்த மணம் செறிந்த அழகிய பூங்காக்களும், குளங்களும், ஆற்றிடைக் குறைகளும், வண்டினம் தேனுண்டு ரீங்காரப் பண்ணைப் பாடிக் கொண்டி ருக்கத் திக்குகள் தோறும் பூக்களினால் அழகு பெற்றுத் திகழு மாறு பொலிவுடன் விளங்கும், வையைப் புதுப்புனலின் வரவு. மரங்களினின்றும் உதிர்ந்த பூக்களோடு, புனலை வழிபடு வார், புனலிடத்துவிட்ட பூக்களையும் சுமந்தபடி, பூவும் நீருமாக வந்த புதுப்புனல் வயல்களிடத்தே சென்று நிறைந்தது. தட்டி ஒலயெழுப்பப்படும் கண்களையுடைய தாளவாத்தியக் கருவிகளி னின்றும் எழும் ஒலியோடு பாட்டின் ஒலியும் சேர்ந்து எழ, ஆடற்கலையிலே நன்றாகப் பயிற்சிபெற்ற ஆடன் மகளிர் ஆடுகின்ற விழாநாள் ஆடலரங்கின் அழகிய சிறப்பை யொத்த தாக, அவ்வயல்கள் விளங்கின. (நடன சாலையிற் பூவும் நீரும் சிதறுவர். மேலும், பூக்களில் திரிந்து கொண்டிருந்த வண்டினங் கள். ஆடும் நடனமாதரைப்போல விளங்கின என்றும் கொள்ளலாம்) ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள மரங்கள். வண்டு. மொய்க்கும் பூந்தாதோடு இடத்திற்கு இடம் மிகுந்திருக்கும்