பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * ഞഖങ്ങധ (16) . . 157 - மலையினின்றும் இழிந்துவரும் அருவி நீரானது, கரை யோரத்து மரங்களை மோதி, அவற்றின் பூங்கொத்துக்களை உதிர்த்து நீருடன் சேர்க்க, அம் மலர்களாலே புது நீரும் அழகு பெற்று விளங்கும். மேலும், நீராடும் மகளிரது, தேன் சிந்தும் மலர்கள் பொருந்திய கூந்தலினுள்ளேயிருந்த தண்ணிய பூவிதழ் களும், மைந்தரது அழகிய மார்பித்து மாலைகளின் மலரிதழ் களும் வீழ்ந்து பரதவுதலால், புதுவெள்ளம் பூக்கள் மலிந்ததாக விளங்கும். அது, விண் மீன்களாகிய மாலையோடு அழகுற்று விளங்கும் பெரிய கங்கையாறு பெருக்கெடுத்து வானத்தே செல்லுதலைப்போல, அதற்கு ஒப்புமையுடையதாக விளங்கும். இதனாலே எவ்விடத்தும் வண்டினம் மொய்த்து ஆரவாரித்தபடி விளங்கதல் என்பது வையையாற்றின் தன்மையாகவும் விளங்கும். சொற்பொருள் சுருங்கை உட்டுளையுள்ள பீச்சாங் குழல், தரையுள் வழியுமாம்; சுரங்கப்பாதை என்பர். ஆயத்தார் - தோழியர். பூ நீர் - சாய நீர் மீளி - தலைவன். இருந்துகில் - பெரிய சேலை. தானை முன்தானை. பூத்தனள்-பூப்படைந்தனள். சாந்து மணச்சாந்து ஊங்கிவரும் - விரைவாக வரும். களிப்பட்ட - புளிப்பேறிய தேறல் - மது. குருதி - குருதிநிறத்துச் சாந்து. மருவினியர் - தோழியர், நாணுதல் - நாணங்கொள்ளல்; தலைவனும் பரத்தையுமாகிய இருவருமே நாணினர் என்று கொள்க. இணர் - பூங்கொத்து. கதுப்பு கூந்தல். - விளக்கம் : இவ்வாறு தோழியர் கூட்டம் நகையாடவும், தான் அப்பரத்தையை விரும்பிக்கூடியவன் தலைவன் என்பதாம். தேன் சொரும் வரை! கள்ளே புனலே புலவியிம் மூன்றினும் - ஒள்ளொளி சேய்தா ஒளிகிளர்உண் கண்கெண்டை 40 பல்வரி வண்டினம் வாய்சூழ் கவின்ொடும் செல்நீர் வீவயின் தேன்சோரப் பல்நீர் அடுத்தடுத்து ஆடுவார் புல்லக் குழைந்து வடுப்படு மன்ன்மதச் சாந்தார் அகலத்தான் எடுத்தவேய் எக்கி நூக்குயர்பு தாக்கத் . 45 தொடுத்ததேன் சோரும் வரைபோலும் தோற்றம் கொடித்தேர்ான் வையைக்கு இயல்பு: பரத்தையர் நீராட்டு விழாவினை நுகர்ந்து இன்புறுதலின் பொருட்டாகக் கள்ளினை உண்டிருந்தனர். அத்துடன் நீரை விட்டு நீங்காமல் நெடுநேரம் நீருக்குள்ளேயே திளைத்தாடிய படியும் இருந்தனர். மேலும், தம் தலைவர்மீது சிறுசினமும் கொண்டிருந்தனர். இவற்றால், ஒளிகிளரும் மையுண்ட கயல் மீன்