பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பரிபாடல் மூலமும் உரையும் போன்ற அவர்களின் கண்கள் செந்நிறத்தைப் பெற்று ஒளி செய்த படி விளங்கின. அப் பெண்களின் கூந்தல் மலர்களிற் பலவான வரிகளைக்கொண்ட வண்டினங்கள் இடந்தோறும் சூழ்ந்து மொய்க்கும். அப்படி மொய்க்கும் அழகோடு உதிர்ந்து நீரித்தே வீழும் அப்பூக்களிலிருந்து தேன்துளிகள் நீரில் வீழ்ந்து கலக்கும். பல்வேறு தன்மையோடும் அடுத்தடுத்து அங்ங்னம் ஆடுகின்றவரான பரத்தையரை, அவர்தம் தலைவர்கள் தழுவினர். அங்ங்னம் தழுவிய ஒரு தலைவன் குழைந்து தழுவுதலினாலே, அவன் மார்பிடத்தே பூசியிருந்த கத்துரிச் சாந்ததமானது கரைந்தும் கரையாமலும் வடுப்பட்டாற்போல விளங்கிக் கொண்டிருந்தது. காற்றாலே எடுக்கப்பெற்ற மூங்கிலொன்று மேலாக நிமிர்ந்து சென்று, உயரத்தேயிருந்த தேனடையைத் தாக்க, அதனால் அதிற் சேர்ந்திருந்த தேன் கீழே வழிவதைப் பொருந்திய மலையினைப்போல, அவன் மார்பகம் அப்போது விளங்கிற்று கொடி பறக்கும் தேரினை உடையானான பாண்டி யனது வையையாற்றின் தன்மை இப்படிப்பட்டதாகும். - சொற்பொருள் : கள் - மது. புலவி -ஊடற்சினம். கெண்டை - கயல். வாரி - கோடு, தட வாய் - இடம். கவின் - அழகு. புல்ல - தழுவ, மான்மதம் கத்துரி. பரத்தையை அணைத்துத் துக்கும் தலைவனும், அதனால் அவன் மார்பிடத்துச் சாந்தம் கலைந்தழியும் நிலையும், மூங்கில் நிமிர்தலால் தேனடையிலுள்ள தேன், பாறைக்கண் வழிவதைப் போன்று விளங்கின என்க. வெள்ளம் வற்றாதிருப்பதாக! வரையார்க்கும் புயல்கரை திரையார்க்குமித் தீம்புனல் - r கண்ணியர் தாரர் தமழ்நறுங் கோதையர் - 50 பண்ணிய ஈகைப் பயன்கொள்வான் ஆடலால் நாள்நாள் உரையும் நறுஞ்சாந்தும் கோதையும் பூத்த புகையும் அவியும் புலராமை மறாஅற்ப வானம் மலிதந்து நீத்தம் அறாஅற்க வையை நினக்கு. 55 - மேகங்கள் சையமலையின்மீது படிந்து இடிமுழக்கைச் செய்தபடி ஆராவரிக்கும். இவ்வினிய புனலானது அலைகளாற் கரைகளிற் மோதி ஆரவாரிக்கும். தலைக்கண்ணியராகவும், மார்பிடத்து மாலையினராகவும், மணங்கமழும் நறிய கோதை யினராகவும், தாம் செய்த கொடையின் பயனைக் கொள்வாரைப் போலச் சென்று சென்று, ஆடவரும் மகளிரும் புது வெள்ளத் திலே நீராடுவர். இங்ங்னமாக அவர் ஆடுதலால், நாள்தோறும் அவர் மேனிடத்துப் பொருந்திய நறுஞ் சாந்தமும், கோதையும், எழுந்த புகையும், இடப்படும் பருப் பொருள்களும் வாடாமல்