பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

quiâ€ಕಿಹ6 # ೧ಕಮBali (17) 159

நிலவுவதாக வானமானது என்றும் மழையினை மறாதிருப்பதாக மேகங்கள் மிகுதியான மழையினைத் தந்து, அதனாற் பெருகிவரும் வெள்ளமும், வையையாகிய நினக்கு என்றும் வற்றாது வந்து வாய்ப்பதாக! - சொற்பொருள் : வரை - மலை. புயல் - மேகம் திரை - அலை. ஈகைப் பயன் - ஈகையாற் பெற்ற நல்வாழ்வுப் பயன். உறையும் , தங்கும்; பரத்தையர் நாளுக்குநாள் வெவ்வேறு வகை மணச்சாந்தைப் பூசுவர் என்பதாம். அவி - நீர்த் தெய்வத்திற்குரிய பலிப்பொருள். - - - - விளக்கம் : இவ் விளையாட்டுத் தானும் பரத்தையும் மேற்கொண்டது என்பதைத் தலைவனும் உணர்வான் என்க. பதினேழாம் பாடல் செவ்வேள் (17) பாடியவர்: நல்லழிசியார் பண் வகுத்தவர்: நல்லச்சுதனார்; பண் ; நோதிறம். - - . . - அடியுறை இயைநர் தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை அசைத்த வேலன் கடிமரம் பரவினர் உரையொடு பண்ணிய இசையினர். விரிமலர் மதுவின் மரம்நனை குன்றத்துக் 5 கோலெரி கொளைநறை புகைக்கொடி ஒருங்கெழ மாலை மாலை அடியுறை இயைநர் மோலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்? தேன் துளிகள் ஒழுகிக்கொண்டிருக்க விளங்கும் புத்தம் புது மலர்கள் மெல்லிய தளிர்கள் அழகிய மென்மையான ஆடை, வார்த்துச் செய்யப்பெற்ற மணிஉயர்ந்திருக்குமாறு முனையமைக்கப் பெற்ற வேல்; முதலிய பலவான காணிக்கைப் பொருட்களையும் சுமந்துகொண்டு சிலர் நிற்பர். சந்தனச் சேற்றைக் கொண்டு தரையை மெழுகியிருப்பர். பக்கத்திலே, ஒரு மரத்தின் அடிப்பக்கத்தே பலியிடுவதற்குரிய வெள்ளாட்டுக் குட்டியைக் கட்டியிருப்பர். தெய்வம் வீற்றிருக்கம் மரமாகிய கடம்பும் அங்கே விளங்கும். வெறியாடும் வேலனும் மற்றும் பலரும் கூடி, அங்கே நின்னைப் போற்றிப்பாடுவர். அவர்களின் உரையோடு, இனிதாக இசைத்த இசையின் ஒலியையும் எழுப்பியபடியிருப்பர் சிலர். இவ்வாறு பலரும் கூடி நினக்கு வெறியயர்ந்து, நின்னை வேண்டித் தம் வெறியயர் களத்திற்கு எழுந்தருளுமாறு அழைப்பார்கள். - • , r . . . . . . . . . . -