பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- J புலியூர்க்கேசிகன் செவ்வேள் (17) 161 திருப்பரங்குன்றத்தின் ஒருபக்கத்தே பாணர்கள் மீட்டும் யாழின் இனிதான இசை எழுந்து கொண்டிருக்கும்; அதற்கு இணையாக மற்றொரு பக்கத்தே புதுமலர்களை மொய்க்கின்ற வண்டினங்களின் இமிர்தலாகிய இசை எழுந்த படியிருக்கும். ஒருபக்கத்தே கணுக்களமைந்த வேய்ங் குழலினின்றும் எழுகின்ற இலையொலி இனிதாக எழுந்தபடியிருக்கும்; மற்றொரு பக்கத்தே அதற்கிணையாகப் பண்ணின் அமைதியோடு ஒலிக்கும்.தும்பிகள் எங்கணும் பரவி இசை ஊதியபடியிருக்கும். ஒரு பக்கத்தே மார்ச்சனை மிகுந்த முழவின் தாள ஒலி எழுந்தபடியிருக்கும்; அதற்கு இணையாக மற்றொரு பக்கத்தே எம்பெருமானாகிய நின்னுடைய உயரமான வரையிடத்தே வீழும் அருவிநீரின் ஒலியும் எழுந்தபடியிருக்கும். ஒரு பக்கத்தே நின்னைக் குறித்த பாடலோடு ஆடுகின்றவரான சிறந்த ஆடன்மகளிர்கள் தம் இடையை அசைத்தசைத்து ஆடியபடியிருப்பர்; அதற்கு இணை யாக மற்றொரு பக்கத்தே வாடைக்காற்று அசைத்தலினாலே ஆடுகின்ற பூங்கொடியானது அசைந்து ஆடியபடியிருக்கும். ஒரு பக்கத்தே பாடினி பாடுகின்ற பாலைப்பண்ணாகிய இனிய குரலொலி எழுந்தபடியிருக்கும்; அதன் கூறுபாடுகளாகிய நெடிய கிளர்ச்சியினையுடைய கிழமையும், நிறையும், குறையும் தோன்றுமாறு அவர் பாடுவர்; அதற்கிணையாக மற்றொரு பக்கத்தே ஆடுதலிற் சிறந்த மயில்களின் அரிக்குரலின் ஒலி அவ்வாறே எழுந்தபடியிருக்கும். நினக்கு மாறுபட்டானாகிய சூரணை அவன் மேற்கொண்ட அந்தந்தச் செயலையே தானும் மேற்கொண்டு வென்றவன் முருகப் பெருமானாகிய நீ அதனால் நின் குன்றமும் மக்கள் எழுப்புகின்ற இசைகட்கெல்லாம் எதிரெதிராக இசையெழுப்பி, அவற்றிற்கு மாறபாடு கொள்ளும் தகைமையினைக் கொண்டிருக்கிறது. - - சொற்பொருள் : யாணர் - புதுவருவாய், புது மலர். யாணர் வண்டு-புதிதாக வந்த வண்டுமாம். கண் கணு, கரைபு-ஒலி மண் - மார்ச்சனை. ததும்ப ஒலிசெய்ய, ஒல்குபு - அசைந்து நுடங்கல் - வளைந்தாடல். பாலையங்குரல் - பாலைப் பண்ணாகிய இனிய இசை ஆடுசீர் மஞ்ஞை ஆடுதலிற் சிறந்த மயில் வழி இல்லை! பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடலோடு பரங்குன்றி னிடைக் கமழ்நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப , - நணிநணித் தாயினும் சேஎய்ச் சேய்த்து; 25 மகிழ்மிகுதேஎங்கோதையர் கூந்தல் குஞ்சியில் சோர்ந்தவிழ் இதழின் இயங்குமா றின்று;