பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் # திருமால் வாழ்த்து (1) - 9 அவள், நஞ்சாகிய நெருப்பைக் கக்கும் அத்தலைகளை எல்லாம் பாடமாக விரித்து, ஆற்றல் பொருந்த நின் திருமுடியின் மேலாக் குடைகளைப்போலக் கவித்து, அவற்றை ம்ெல்ல அசைத்தபடியே நினக்கு நிழல் செய்துகொண்டிருக்கின்றான். திருமகளை எப்போதும் நீங்காதே கொண்டிருக்கும் பரந்த மார்பினை உடையாய்! குற்றமற்ற ஒனியினைப் பரப்பியபடியிருக்கின்ற, வெண்சங்கைப்போன்ற திருமேனி வண்ணத்தினை உடையாய்! மிக உயர்ந்த மூங்கிற்கம்பத்தின் மேலாக எழில்மிக்க வேழக் கொடியினை உயர்த்திருப்பவனே! வளைந்த முகப்பினைக் கொண்ட கலப்பைப் படையினை ஏந்தியுள்ளவனே! ஒப்பற்ற காதணிகள் விளங்கத் திகழ்வோனே ஒப்பற்ற பெருமானே! சொற்பொருள் : அணங்கும் காண்பாரை அச்சமுறச் செய்யும் தெய்வத் தகைமை, அருந்தலை அரிதான அமைப்பைக் கொண்ட தலை; பிறரால் நெருங்குதற்கரிய தலையும் ஆம் தீ கொடிய நஞ்சு. திறன் - ஆற்றல், அணவர அசைந் தாட மா - திருமகள் வால் வளை வெண்சங்கு சேயுயர் பணை மிக உயரத்துக்கு உயர்ந்த மூங்கிற் கம்பம். வேழம் வேழக் கொடி. நாஞ்சில் கலப்பை. குழை காதணி, ஒரு குழை ஒருவனை ஒப்பற்ற காதணிகளைக் கொண்ட சிறந்தோனே ஒற்றைக் குழையினான சிவபிரானே எனவும் இதற்குப் பொருள் கொள்வர்; திருமால் சிவசக்தியின் ஆண்கோலம் என்னும் தத்துவ உண்மை யைக் கருதினால், சிவசக்தியைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். விளக்கம் : திருமால் கண்ணனாகவும், பலராமனாகவும் ஒரே சமயத்தில் அவதாரம் செய்திருந்தனன். கண்ணன் முக்காற்பங்கும். பலராமன் காற்பங்கும் நாராயண அம்சத்துடன் பிறந்திருந்தனர் என்பர் சான்றோர். இதனால், பலராமனையே திருமாலாகக் கொண்டு தம் வாழ்த்தைத் தொடங்குகின்றார் ஆசிரியர்.இதனைக் கவனிக்க வேண்டும்.வெண்மைக்கு முதன்மை தருவது என்பதும் நினைக்க - - மறைப் பொருளே! எரிமலர் சினைஇயகண்ணை, பூவை விரிமலர் புரையும் மேனியை, மேனித் திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை, மார்பில் தெரிமணி பிறக்கும் பூணினை, மால்வரை எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை, சேவலங் கொடியோய்! நின் வலவயின் நிறுத்தும் ஏவலுள் பணிந்தமை கூறும் - நாவல் அந்தணர் அருமறைப் பொருளே!