பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 – பரிபாடல் மூலமும் உரையும். நின் குன்றின் அடிவாரத்தேயுள்ள வயற்புறங்களிலே அணி யணியாகப் பரவி நிற்பாரின் தோற்றம், வயலிடத்துப் பரந்துள்ள : வெள்ளிய அருவிநீரைப் போலத் தோன்றும். அவ்வயற்புறங் களிலே மேலோர் அக்கூட்டத்திடையே புகுந்து செல்லுதலால், அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களிலிருந்து வீழ்ந்த மணிகள், நீலப்பூக்களையுடைய வயற்புறத்தைக் கலக்கிச் சேறுபடச் செய்யும். - - தெய்வங்கள் பலவற்றையும் குறிப்பிட்டு எடுக்கப்படுகின்ற திருவிழாக்களும், திருத்தமான வகையிலே செய்யப்படும் விருந்தயர்தலாகிய சிறப்புக்களும், அழகான வெள்ளருவிகளால் அழகுபெற்று விளங்கும் திருபரங்குன்றத்திற்கும், கெடுதலில்லாத சிறந்த சீர்மையுடைய வளம் நிறைந்த வையை ஆற்றுக்கும், கொய்யப்பட்ட பிடரிமயிரினையுடைய குதிரைகளைப் பூட்டி யிருக்கும் சிற்றரசர்களின் தேர்களுக்கு நடுவே, உயர்ந்து விளங்கும் மீனக்கொடி பறக்கும் தேரினை உடையவனாகிய பாண்டியனுக் குரியதான கூடற் பேரூருக்கும், முறைமையாக நிகழ்கின்ற ஓர் ஒழுங்கினை உடையவாகும். அவற்றுள் தடுமாற்றம் ஏற்படினும், அதுவும் பெருமானாகிய நின்னருளால், முடிவில் நன்மையாகவே முடியும். சொற்பொருள் : தெய்வ விழவு - பரங்குன்றில் முருகனைக் குறித்தும், வையையில் நீர்த் தெய்வத்தைக் குறித்தும், மதுரையில் பல தெய்வங்களைக் குறித்தும் எடுக்கப்படும் விழாக்கள். தொய்யா - கெடாத, உளை - பிடரிமயிர் வான் தேர் - உயரமான தேர். தடுமாற்றம் நன்று - தடுமாற்றம் மேலும் பல விழாக்களை யும் விருந்துகளையும் நிகழ்வித்து நன்மையாக இறுதியில் முடிவு எய்தும். பாடுதும் பரவுதும்! எனவாங்கு, ~ ; மணிநிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடிப் பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ! - பணிபுஒரீஇ நின்புகழ் ஏத்தி 60 அணிநெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்; அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்; ஏம வைகல் பெறுகயாம் எனவே. பெருமானே! நீலமணியின் நிறத்தையொத்த நிறத்தோடு விளங்கும் மயிலையும், உயரமாக எடுக்கப்பெற்ற சேவற்புள்ளின் உருவம் பொறித்த கொடியினையும் கொண்டோனே! பிணி முகம் என்னும் களிற்றினைச் செலுத்திச் சென்று, சூரனோடு நிகழ்த்திய போரிலே வெற்றிபெற்ற இறைவனே! பிற தெய்வங்