பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்_செவ்வேள் (18) 165 களைத் தொழுதலைக் கைவிட்டேமாய், நின் புகழையே மேற்கண்டவாறெல்லாம் உயர்த்துப் பேசி, நின் அழகிய நெடிய பரங்குன்றினைப் போற்றிப் பாடுவேம்; நின் திருவடிகளைத் தொழுவேம். - அங்ங்னம் யாம் செய்யும் அவை, யாமும் எம் சுற்றமும் நின் திருவடிக்கண் பாதுகாவலுடன் வீற்றிருக்கும் அந்தப் பேற்றி னைப்பெறுக என்று கருதியேயாகும்.அதனைக் குறித்தே யாங்கள் நின்னைப் பரவுகின்றோம். பெருமானே! அந்தப் பேற்றினை எமக்குத் தந்தருள்வாயாக. - - - சொற்பொருள் : மணி - நீலமணி, புள் கோழிச் சேவல். பிணிமுகம் பெருமானூர்ந்த களிற்றின் பெயர். பணிபு ஒரீஇ பிற தெய்வங்களைப் பணிதலைக் கைவிட்டு ஏமம் காவல் வைகல் தங்குதல். - - . விளக்கம் : முருகப் பெருமானைப் போற்றிப்பாடுவதும் பரவுவதும் எல்லாம் அவன் அடியுறை வாழ்வைப் பெறுவது கருதியே என்பதாம். - - பதினெட்டாம் பாடல் செவ்வேள் (18) பாடியவர் : குன்றம்பூதனார். பண் வகுத்தவர் : நல்லச் சுதனார். பண் : காந்தாரம். - - எதிரொலிக்கும் குன்று போரெதிர்ந்து ஏற்றார் மதுகை மதம்தபக் காரெதிர்ந்து ஏற்ற கமஞ்சூல் எழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங்கு அழுவத்துச் சூர் நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்! நின் சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேரெதிர்ந்து 5 ஏறுமாறு ஏற்மிக் குன்று; -- பெருமானே! நின்னோடும் போரிடலை மேற்கொண்டு, நீ விடுத்த சமாதானத் தூதினையும் ஏற்றுக்கொள்ளாமல், நின்னுடன் போர்செய்தலையே மேற்கொண்டனர், சூரனும், அவன் சுற்றத்தாருமாகிய அவுணர்கள். அவர்களுடைய செருக் காகிய மதம் கெடும்படியாக, நீ அவர்களைக் கொன்று ஒழித்தனை கார்காலத்தை மேற்கொண்டு, அதனால் நீரினை ஏற்றுச் சூல்முதிர்ந்து விளங்கும் கரிய மேகத்தைப்போல, நீராலே நிரம்பப்பெற்றுத் தன்னை ஏற்றிருக்கும் நிலத்தினாலே தாங்கப் பெற்று விளங்கும் கருங்கடலின் நடுவிடத்தே சென்று, அச்சத்தை நிரம்பவும் மிகுவித்துக்கொண்டு அசைந்தபடியிருந்த சூரனாகிய மாமரத்தையும் வெட்டி, அவனையும் அழித்த வேற்படையினை