பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பரிபாடல் மூலமும் உரையும் உடையோனே! நின் பிறந்த தன்மையினாலே சிற்புடையதாகப் புகழ்பெற்று விளங்கும் இமய்க் குன்றத்தோடு, எல்லா வகை யானும் ஒப்புமை கொண்டதாக அமைந்து, சில சமயங்களில் அதனோடும் மாறுபட்டுத் தன்னுயர்வை வலியுறுத்தப் போட்டியையும் எதிரேற்கக்கூடியது, நீகோயில் கொண்டிருக்கும் இத் திருப்பரங்குன்றம் ஆகும்! சொற்பொருள்: எதிர்ந்து-மேற்கொண்டு.மதுகை ஆற்றல் மதம் - செருக்கு தப அழிய கமஞ்சூல் - நிறைசூல். நேர் எதிர்ந்து முறைமையை மேற்கொண்டு. அழுவம் - கடல். சூர்- அச்சம். மா - மாமரம். நீர் நிரந்தேந்திய குன்றம் என்றது இமயக் குன்றினை 'நீர் நிரந்து ஆது விளங்குதல் சான்றோரை உடைத்தாயிருத்தலால் ஏறுமாறு மாறுபாடு. இக் குன்று' என்றது திருப்பரங் குன்றத்தை . . . . விளக்கம் : முருகப் பெருமானின் தோற்றத்திற்கும், இளமைத் திருவிளையாடல்களுக்கும் உரிய களனாக விளங்கி, - - அதனாற் புகழ்பெற்றது. இமயக்குன்றம். ஆனால், வெற்றி வீரனாகவும், திருமணக் கோலங்கொண்டு தேவியருடன் கோயில் கொண்டிருக்கும் அழகனாகவும் அவன்திருப்பரங்குன்றிலேதான் விளங்குகின்றனன்.இதனால், முருகனோடு தொடர்பு கொண்டு அதனாற் பெற்ற புகழிலே, இமயத்தைவிடப் பரங்குன்றமே உயர்வுச் சிறப்பு உடையது என்பதாம். ஊடலும் கூடலும் ஒள்ளொளி மணிப்பொறி ஆல்மஞ்ஞை நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டனள் திருநுதலும் உள்ளிய துணர்ந்தே னஃது உரையினி நீ எம்மை எள்ளுதல் மறைத்தலோம்பு என்பாளைப் பெயர்த்தவன், 10. காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ் பேதுற்ற இதனைக்கண்டு யான்நோக்க நீ எம்மை ஏதிலா நோக்குதி என்றாங்கு உணர்ப்பித்தல் ஆய்தேரான் குன்ற இயல்பு; - காதலனும் காதலியுமாகிய இருவர், திருப்பரங்குன்றத்துச் சோலையில், ஒரு நாள் களிப்புடன் சந்தித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையிலே சிறந்த ஒலியைப் பொருந்திய நீலமணியைப் போன்று விளங்கும் புள்ளிகளைத் தன் தோகையிடத்தே பெற்றுள்ள மயிலொன்று, தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.அதனை அக்காதலன் நோக்கினான்.தன் உள்ளத்துள்ளே தன் காதலியின் சாயலை மயிலின் சாயலோடு ஒப்பிட்டு, அந்த நினைவிலேயே திளைக்கத் தொடங்கினான். - அதனை அக் காதலி கண்டாள். அழகிய நுதலினளான அவள்,