பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uါgfါဒါဧ၏။ * செவ்வேள் (18) 167 அவன் நினைவு வேறோர் அழகியின்மேற் சென்றதுபோலும் எனவும் ஐயுற்றாள். நீ உள்ளத்துக் கருதியதொரு கருத்து உளதென்பதனை உணர்ந்தேன். அஃது யாதென இப்போதே எனக்குச் சொல் வாயாக’ என்றாள். அவன் யாதுங் கூறானாக. அவள் கொண்ட அச் சினத்தால், அவளது அழகு புதிதான பாங்கு பெற்று விளங்குவதைக் கண்டு களிக்கலானான். அவள் சினம் மிகுந்தது. தன்னை அவன் இகழ்வதாகக் கொண்டாள்.'நீ தான் எம்மைப் பிற மாதரோடு ஒப்பிட்டு, நின் உள்ளத்துள்ளேயே இகழ்கின்றனை. அதனை எமக்கு மறைத்தலைக் கைவிடுக' என்று சீறினாள். அவன் அவள் சினத்தைக் கண்டான். 'அன்பிற்கு உரிய வனே! நின் இயலினைத் தான் களவாடிக்கொண்டு, தானும் நின்னொப்ப விளங்குதலை எண்ணிக் களிப்புற்றதாய் மகிழ்ந்து, அதனாற் பித்துற்றுத் தோகை விரித்து ஆடுகின்ற இம்மயிலின் தன்மையைக் கண்டேன். அதன் அறியாமையை எண்ணினேன். அதன் நிலைக்கு இரக்கமுற்று, அதனை நோக்கினேன். அங்ங்னம் பார்க்கவும், நீதான், எம்மை அயலான் ஒருவனைப்போலக் கருதிச் சினத்துடன் நோக்குதல் முறையாமோ?" என்றான் அவன். அதனால், அவள் ஊடல் நீங்கினாள். அழகிய தேருடையான் பாண்டியன். அவனுக்குரிய பரங்குன்றத்தின் இயல்பு இவ்வாறு விளங்குவதாகும். - - சொற்பொருள் : மணி - நீலமணி, பொறி புள்ளி. திருநுதல் - அழகிய நெற்றியினாள்; காதலியைக் குறித்தது. எள்ளுதல் - இகழ்தல். இயல் - அழகு சாயல், பேதுறல் - மனமயங்கல்; பித்துக்கொள்ளல். ஏதிலான் - அயலான். உணர்ப்பித்தல் - ஊடலை நீக்கித் தெளிவித்தல். . விளக்கம் : இயற்கையழகுடன் கலந்து, காதலர் இவ்வாறு கூடியும் ஊடியும் இன்புறுதற்குக் களனாக அமைந்து, அவர்தம் இன்பத்தை விளைவிக்கும் செவ்வியது திருப்பரங்குன்றம் என்பதாம். - பாணனின் பாட்டு ஐவளம் பூத்த அணிதிகழ் குன்றின்மேல் 15 மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணார் கைவளம் பூத்த வடுவொடு காணாய் நீ மொய்வளம் பூத்த முயக்கம்யாம் கைப்படுத்தோம் மெய்வளம் பூத்த விழைதகு பொன்னணி நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம் 20 பூத்தன், பாணா! நின் பாட்டு;