பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பரிபாடல் மூலமும் உரையும் - "ஐவகையான வளங்களாலும் நிறைவுற்றுப் பொலிவுடன் அழகு பெற்று விளங்குவது திருப்பரங்குன்றம். அதன்மேல், மைவளம் சேர்த்தலாலே பொலிவுற்ற, குவளை மலரையொத்த குளிர்ந்த கண்களை உடையாரான பரத்தையரின் தழுவுதலாலே பெற்ற, கையது நகக்குறிகளின் அழகிய வடுவோடு வந்துள்ள தலைவனின் தன்மையை நீயும் காணாயோ? மிகவும் இறுக்கமுறத் தழுவிக் கிடத்தலாலே ஏற்பட்ட அந்தக் கூட்டத்தின் அடையாளங்களோடு, அவனை யாம் கையும் களவுமாகக் கைப்பற்றிக் கொண்டோம். நின்னுடல் அழகுப் பெலிவுடன் விளங்குமாறு, நீ விரும்பத்தகுந்த பொன்னணிகள் பலவும் பூட்டியவனாக நட்டபாடை என்னும் பண்ணினை, நின் பண்ணிசையும், அதனோடு பொருந்த நீ பாடும் பாட்டும் பொய்யின் வளமையினாலே பெரிதும் அழகுடன் திகழ்கின்றன. ஆதலின், யாம் நின் தலைவனை ஏற்கமாட்டோம். நின் பொய்யையும் நம்பமாட்டோம். நீதான் அகன்று செல்வாயாக!” தன் காதலனின் தூதொடு வந்த பாணனிடம், இவ்வாறு கூறி, அவனைப் ப்ோக்குகின்றாள் ஒரு கற்புடைய நங்கை. இத்தகைய ஊடல் மகளிர் தம் தகுதியைப் பேணி விளங்குவதும் பரங்குன்றம் ஆகும். சொற்பொருள் : ஐவளம் - ஐவகை வளமைகள். அணி அழகு. மை - கண்ணிற்குத் தீட்டும் மை. மலர் - குவளை மலர். மழைக்கண் - குளிர்ச்சியமைந்த கண் கை வளம் நகக்குறிகளின் மிகுதி. மொய்த்தல் - நெருங்குதல். முயக்கம் - தழுவுதல். பொன்னணி - பொன்னாபரணங்கள்; இவை தலைவனால் தரப்பட்டவை; ஆதலின் இகழ்ச்சி தோன்றக் கூறியதாம். நைவளம் - நட்டபாடை என்னும் பண். சீர் - தாளம். - காமவேள் தொழில் தண்தளிர் தருப்படுத்து எடுத்துரை.இ மங்குல் மழைமுழங்கிய விறல்வரையான் கண்பொருபு சுடர்ந்துஅடர்ந்துஇடந்து - இருள்போழும் கொடிமின்னால் 24 வெண்சுடர் வெல்வேள்! விரைமயில்மேல் ஞாயிறுநின் ஒண்சுடர் ஓடைக் களிறேய்க்கும் நின்குன்றத்து எழுதெழில் அம்பலம் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்; வெண்மையொளி சுடர்கின்ற வெற்றிவேலினைக் கொண் டோனே! குமரவேளே! விரையச் செல்லும் மயிலின் மேலாக எழுந்தருளி வருகின்ற இளஞாயிறே! -