பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புலியூர்க்கேசிகன் ★ செவ்வேள் (18) 171 கொண்ட மேகக்கூட்டங்கள் தம்முள் மோதிச் சினத்தோடே - முழக்கமிட, நின் குன்றமே, அத் தாள ஒலியோடு முழக்க மிட்டிருப்பதுபோல விளங்கும். . . அருவிகள் ஆரவாரத்துடன் வீழ, அவற்றால் நின் மலைப் பகுதிகள் முத்துமாலைகளை அணிந்திருப்பனபோலத் தோன்றும் குருவிகள் ஆரவாரத்துடன் வந்து மொய்க்கத் தினையிடத்துக் கதிர்களும் முற்றிக் குவிந்திருக்கும். சுனைகளின் ஓரங்களிற் கொறுக்கச்சிச் செடிகள் வளர்ந்து, தம் தலையைச் சுனைநீருள் சாய்த்தபடி விளங்கும். வண்டுகள் ஊதியபடி யிருக்கும் பன்னிற மலர்கள் பூத்து, அச்செடிகள்ை முட்டுவன போல விளங்கும். இக் காட்சியானது வளைந்து அழகு பெற்று விளங்குகின்ற வானவில்லை அச் சுனைகளும் பெற்றிருப்பது போல விளங்கும். சொற்பொருள் : வல்லு குது. வட்டு கழங்கு சூதாடும் வட்டு, கோலின்று வளைத்தது. வச்சிரத்தான் - வச்சிரப் படையுடையான்; இந்திரன். தாயின சொரிந்து பரவின. 'நெட்டுருட்டுச் சீர்’ என்றது, மலைப்பகுதிகளில் வருகின்ற தேருருளுள்கள் எழுப்புகின்ற ஒலியினை கருவி - தொகுதி கொண்ட மேகங்கள்; இசைக் கருவிகளும் ஆம். சீர் - தாளம். எருவை கொறுக்கச்சி கூனி வளைந்து வளைத்த பொருந்திய பிரியாதிருக்க புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து சுருதியும் பூவும் சுடரும் கூடி எரயுருகு அகிலொடு ஆரமும் கமழும் செருவேல் தானைச் செல்வநின் அடியுறை . . உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப் - 55 பிரியா திருக்களம் சுற்றமோடு உடனே! - செருவிளைக்கும் வேற்படையினைக் கொண்டவனாகத் தேவர் படையணிகளையும் உடையவனாக விளங்கும், தேவ சேனாபதியாகிய செல்வனே! முறுக்குண்ட நரம்பினின்று எழுகின்ற இசையும், அதனோடு பொருந்த எழும் பாட்டும் ஒன்றுகலந்து எழும் இன்னிசையொலி விளங்கும். அவற்றுடன் சுருதிகளை ஒதுவார் ஒதும் ஒலியும் சேர்ந்து எழும். - நின்னைப் போற்றி அருச்சிப்பார் சொரிந்த பூக்களும், ஏற்றிய சுடர்களும் ஒன்றுகலந்து தோன்றும். நெருப்பிலிடப் பட்டு உருகும் அகிலோடு, சந்தனத்தின் மணமும் கமழ்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு நின்னைப் போற்றி வழிபாடுவார் நின்னடியவர். அவர் எல்லாம் உரிமையோடு நீ கோயில் கொண்டிருக்கும் நகராகிய இவ்விடத்தே ஒருங்கே சார்ந்திருப்ப்ர்.