பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பரிபாடல் ു .ങ്ങു எரிநெருப்பை யொப்ப விளங்கும் செந்தாமரை மலரினைப் போன்ற கண்களைக் கொண்டோனே காயாவின் இதழ் விரிந்த மலரைப்போன்று விளங்கும் கார்வண்ணத் திருமேனியை உடையோனே அம்மேனிக்கண்ணே திருமகள் நீங்காது உறையும் மார்பினைக் கொண்டோனே! அம் மார்பினிடத்தே தெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசிக் கொண்டிருக் கின்ற பூணாரத்தைப் பூண்டிருப்பவனே! நீலமலையினை எரியானது சூழ்ந்தாற்போல் விளங்கும், செம்பொன் புனைந்த உடுக்கையை உடுத்திருப்போனே! கருடச்சேவலை வெற்றிக் கொடியாக உடையவனே! நின் ஆற்றலுக்கு உள்ளாகவே அனைத்தையும் நிறுத்துகின்ற நின் ஆணைக்குள்ளாகவே அன்ைத்துயிரும் பணிந்து தொழில்கேட்கின்ற, அந்தச்செவ்வியை எடுத்துரைக்கின்ற நாவன்மைபெற்ற அந்தணரின் அரியவான நான்மறைக்ட்கும், மூலப்பொருளாக இலங்குகின்ற பெருமானே! சொற்பொருள் : எரி-எரிநெருப்பு:பூவை-காயாமலர்.திரு - திருமகள் தெரிமணி - தெரிந்தெடுத்த மணி, இது செம்மணி. மால் வரை - நீலமலை. பொன் - செம்பொன். உடுக்கை - உடை. சேவல் - கருடச்சேவல் வலம் - வெற்றி ஆற்றல் ஏவல் - ஆணைச் சக்கரம், ஆக்ஞாசக்கரம். நாவல் - நாவன்மை கொண்டவர். அந்தணர் - அருளாளர். நிறுத்தல் - நிலைபெறுமாறு செய்தல். விளக்கம் : இப்பகுதி திருமாலை நீலமேனியினனான கண்ணபிரானாகக் கொண்டு போற்றுகின்றது. அருமறையின் உட்பொருளாக விளங்கும் ஆதியாகிய அவனைப் போற்று கின்றது. கொச்சகமாகிய இப்பகுதி 'எருத்து’ என்றும் சொல்லப்படும். - - தானவரை வென்றனை! இணைபிரி யணிதுணி பிணிமணி எரிபுரை விடரிடு சுடர்படர் பொலம்புனை வினைமலர் 15 தெரிதிரள் எரியுரை மிகுதன முரண்மிகு - கடல்தரு மணியொடு முத்தியா கத்தோன்றி நெறிசெறி வெறியுறு முரல்விறல் அணங்குவில் தாரணி துணிமணி வெயிலுறு மெழில்புகழ் மலர்மார்பின் எளிவயிர் நுதியெறி படையெருத்து மலையிவர் நவையில் 20 துணிபட வினமணி வெயிலுற எழில்தனச் சிமையிருள் கலமுறு சிறுபுரி யொருபுரி நாண்மலர் மலரில சினவளர் பருதியின் ஒளிமணி மார்பணி மிக நாறுரு வினவிரை வளிமிகு கடுவிசை . உடுவுறு தலைநிரை இதழணி வயிறிரிய வமரரைப் 25 போரெழுந் துடன்றிரைத் துரைஇய தானவர் சிரமுமிழ் புனல்பொழி பிழிந்து முதிர்பதிர் பலதொட வமர்வென்ற கணை!