பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - பரிபாடல் ു உரையும் விரும்பத்தகுந்த சிறப்புக்களைப் பெற்றுள்ள குதிரைகளின் மேலோராகச் சிலர் செல்வர். செல்லுதற்கேற்ப அமைக்கப் பெற்ற தேரின் மேலோராகச் சிலர் செல்வர். தெரிந்தெடுத்த மலர்களால் தொடுத்த மாலைகளை அவர்கள் அணிந்திருப்பர். அவற்றின் ஒளியானது தெருவிடத்தேயுள்ள புலர்காலை இருளைப் போக்கு வதாயிருக்கும். இவ்வாறு செல்லும் மக்கள் கூட்டத்தால், நின் திருப்பரங்குன்றத்தோடு மதுரையும் இடைவெளி யெல்லாம் இல்லையாகுமாறு ஒன்றுபட்டாற்போல விளங்கும். - அவ்வாறாக நின்னைத் தொழுவதற்கு வரும் மக்கள் கூட்டத்தினர் வரிசைவரிசையாக வருவார்கள். நெருங்கித் திரண்டும் வருவார்கள். அவர்கள் தலைகளில் விளங்கும் தலைமாலைகள் நிலமகட்குப்பூட்டிய, பூக்களை நேராகப்பெய்து செறிவாகக் கட்டிய மாலையைப்போல அழகுறத் தோன்றும். தண்ணிய மணற்பாங்கினிடத்தே ஆரவாரித்து மோதும் கடலலையினைப் போல, அவர்கள் செல்லும் வழியெல்லாம் ஒரே ஆரவாரத்துடன் விளங்கும். சொற்பொருள் : புலம் அறிவு இரவுத்தீர் எல்லை. விடியல் கலப்பு - சேர்க்கை. அறம் - இல்லறக் கடமைகள் - அதன் பயன் - அறத்தின் பயன்; துறக்க வாழ்வு. சிறந்தோர் உலகம் - துறக்க உலகம். படருநர் - செல்பவர். உரி மாண்கலம் - அணிதற்குரிய மாட்சி விளங்கும் அணிகலம். ஒண்துகில் - ஒள்ளிய துகில்; ஒண்மை - ஒளிகொண்ட தன்மை புரி - விருப்பம் போக்கமை - போதற்கெனப் பண்ணப்பட்ட நேர்பு - வரிசையாக நிறைபு - மிகுதியாக ஆர் வேலை - ஆர்க்கும் கடல். யாத்திரை - பயணம் விளக்கம் : உலக வாழ்வியலிற் சிறந்து விளங்குவோரான மதுரைநகரத்து மக்கள், புலர்காலை வேலையிற் சென்று பரங்குன்றப் பெருமானை வழிபடுகின்ற சிறப்பைக் கூறுகின்றனர். - வலம் வரும் வழுதி சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடைவரு சூழல் - புலமாண் வழுதி மடமயி லோரும் மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணவ ரோடும்நின் குருறை குன்றின் தடவரை எறிமேல் பாடு வலம்திரி பண்பின்- பழமதிச் • , சூடியசையுஞ் சுவல்மிசைத் தானையின் 25 பாடிய நாவிற் பரந்த வுவகையின் - - நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே படுமணி யானை நெடியோய்; நீ மேய கடிநகர் சூழ்நுவலுங் கால்; -