பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * செவ்வேள் (19) 175 - ஒலிமுழங்கும் மணிகளையுடைய பிணிமுகம் என்னும் பெயரைக் கொண்ட களிற்றினை ஊர்ந்துவருகின்ற முருகப் பெருமானே! இருசுடர்களுள் ஒன்றாகிய சந்திரனானவன். தன்னைச் சூழவருகின்ற தாரகைக் கூட்டங்களுடன், மேரு மலையை வலமாகச் சுற்றி வருவான். அவனைப் போலவே, சந்திர குலத்தோன்றலும், அறிவிலே சிறப்புற்றோனுமாகிய பாண்டி யனும் நின் குன்றினை வலம் வந்தான். - - இளைய மயிலைப் போலும் சாயலுடையவரான பணிப் பெண்களுடனும், தன் மனையாட்டியரோடும், கடமைகளை அறிந்து காரியமாற்றவதிற் சிறந்தவரும், நோக்கத்து மாத்திரத் தாலேயே தலைவனின் எண்ணத்தையறிந்து செயலாற்றுவோரு மான அரசப் பணியாளர்களும், அவனைச் சூழவும் வந்து கொண்டிருந்தனர். நினக்குரியதான, சூரர மகளிர் வாழுகின்ற திருப்பரங்குன்றத்தின் அகன்ற மலைப்பகுதியின் உச்சியிலே ஏறி, அந்தப் பாண்டியன், மேலேயுள்ள நின் திருக்கோயிலையும் வலம் வருவான் நின்னை வேண்டிப்பாடுமேற்கொண்டு பாண்டியனும் வலம்வருகின்ற தன்மையைக் கொண்டது நின்பரங்குன்றம் ஆகும். - பழமையாக வருகின்ற தன் குலச்சின்னமாகிய மதியினைச் சூடியவனாகவும், தோள்மீது கிடந்தசையும் தலைப்பாகையின் முன்தானைப் பகுதியை உடையவனாகவும், நின் புகழைப் பாடிப் போற்றிய நாவினை உடையவனாகவும், நின்னைத் தரிசித்ததனாலே ஏற்பட்ட பெருகிய உவகையினை உடையவனாகவும் பாண்டியன் விளங்குவான். அவனைப் போன்றே, இத் தமிழ்நாட்டு மக்களும், இத் தமிழகத்துநகரங்களிலுள்ள மக்களும், முற்றவும் நின்னைத் தொழுது பணிந்து செல்வார்கள். பெருமானே! நீ கோயில் கொண்டிருக்கும் காவலையுடைய திருக்கோயிலின் சூழ்நிலை யைச் சொல்லுவதானால், அதுதான் அத்துணைச் சிறப்பான தாகும் பெருமானே! - சொற்பொருள் : சுடர் இருசுடருள் ஒன்றான மதியம். தாரகை - விண்மீன். மேரு - மேருமலை. புடை - பக்கம். புலம் - அறிவு மடமயில் - இளைய மயில் மடமயிலோரும் மனையவர் எனக் கொண்டு, இளைய மயிலும் சாயலைக் கற்கும் செவ்வி கொண்ட மனையவர் எனினும் ஆம் கடன் கடமை. கண்ணவர் - நோக்கமறிந்து செயலாற்றும் பணியாளர். சூர் - சூரர மகளிர். தடம் - அகற்சி. பாடு - ஒன்றை வேண்டி அது சித்தியாகும்வரை நோன்பு கிடத்தல், பழமதி - தொன்று தொட்டு வரும் பழமைச் சிறப்புடைய மதி. சுவல் - தோள். தானை - முன்தானை; தலைப்பாகையின் முன் பகுதி படுமணி - ஒலிக்கும் மணி கடி காவல்.