பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - பரிபாடல் மூலமும் உரையும் பாசறை போன்றது தும்பி தொடர்கதுப்பத் தும்பி தொடராட்டி 30 வம்பணி பூங்கயிற்று வாங்கி மரன்அசைப்பார்: தண்தார்ப் புரவி வழிநீங்க வாங்குவார் திண்தேர் வழியிற் செலநிறுப்பார்; கண்டக் கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து - பிரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே - 35 குருகெறி வேலோய்! நின் குன்றக்கீழ் நின்ற இடைநிலம் யாமேத்து மாறு; - கிரவுஞ்சப் பறவையின் பெயரை உடையதான குன்றத்தை, நின் வேலினை எறிந்து பிளந்து சிதைத்த வேலோனே! நின்னைக் காண வருபவருள் பலர் யானைகள் மீதாக வருவர் மற்றும் பலர் பலவகை ஊர்திகளினும் வருவர். வண்டினம் கன்னத்தே ஒழுகுகின்ற மதநீரிலே மொய்த்துக் கொண்டிருக்க வரும், அவ் யானைகளை வரிசைப்படுத்திப், புதிதாக அணிந்துள்ள அழகான கயிற்றைப் பற்றி இழுத்துச் சென்று, அவ்விடத்தேயுள்ள மரங்களிலே கட்டி வைப்பார்கள். தண்ணிய தாரினைக் கொண்ட குதிரைகளை, அவை வழியை விட்டு ஒதுங்கி நிற்குமாறு வரிசை . யாக ஒதுக்கிக் கட்டியிருப்பார்கள். உறுதியான தேர்களை வழிக்கு அயல்ாக ஒருபுறத்தே கொண்டு நிறுத்தி வைத்திருப்பார்கள். களிறுகளுக்கு உணவாகக் கணுக்களையுடைய க்ரும்புகளை வெட்டிக் கவழமாக ஊட்டுவார்கள். இவ்வாறு மலையடி வாரம் எங்கணும் நிறைந்திருக்கும் யானைகளும், தேர்களும், குதிரை களும் சேர்ந்து, அவ்விடமானது, நிமிர்ந்து செல்லும் தானை யினை உடையோனாகிய பாண்டியனின் பாசறையைப் போலத் தோன்றும் நின் குன்றத்தின் அடிவாரத்தே விளங்கும் இடை நிலப் பகுதியை, யாம் போற்றும் வகை, அது பாண்டியனின் பாசறைபோலத் திகழும் என்பதுதான். - சொற்பொருள் : தும்பி - வண்டு; யானை வம்பு - புதுமை, வாங்கி இழுத்துச்சென்று. அசைப்பர் கட்டுவர். கண்டம்-கணு. நிமிர் பரிதானை - வெற்றிச் செருக்கினாலே தலைநிமிர்ந்து செல்லும் தானை குருகு - கிரவுஞ்சம். - வழிபடுவோர் குரங்கருந்து பண்ணியம் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் தெய்வப் பிரமம் செய்கு வோரும் - 40 கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரும் - யாழின் இளிகுரல் சமம்கொள் வோரும் வேள்வியின் அழகியல் விளம்புவோரும்