பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുകേട് * செவ்வேள் (19) - 179 அவ் எதிரொலியை அழைப்பொலியெனக் கருதியவளாகக் குகையிடத்தே செல்வாள்; அங்கே பெற்றோரைக் காணாத வளாக, மீண்டும் கூவுவாள்.அவள் கூவ, மீண்டும் பெற்றோர் கூவ, மலைக்குகைகள் எதிரொலிக்க, அப்பேதையாள் சென்றுசென்று. வருந்த விளங்கும் அறியாமைத் தன்மையினைக் கொண்டதும், பக்தர்களின் வாழ்த்தொலிக்கு உவந்து அருள்பவனாகிய முருகப்பெருமானுடைய குன்றத்தின் தன்மையாகும். - சொற்பொருள் : பிறந்த தமர் - பெற்றோர். பிறங்கல் - மலையிடைப் பெருங்கல் மலைப் பிளப்புக்களும் ஆம்.நெறி-வழி. விளியேலாமை. கூப்பீடு வரும் இடத்தை உணராமை முழை குகை. - - விளக்கம் : 'பெற்றோரின் கூப்பீட்டொலியை மலைக் குகைகளும் எதிரொலிக்கும் என்றதனால், பிறரின் துயரங் கண்டவிடத்து இரங்கும் நெகிழ்வு அக் குகைகட்கும் உண்டென் றனர். இதனால், அப் பரங்குன்றினையுடைய பெருமானின் அருளுந் தன்மையையும் கூறினர். - - மகளிரின் மருட்சி நனிநுனி நயவரு சாய்ப்பின் நாறிணர்ச் சினைபோழ் பல்லவம் தீஞ்சுனை உதிர்ப்ப உதிர்த்த சுனையின் எடுத்த தலைய அலர்முகிழ்உற அவைகிட்ப்பத் - 70 தெரிமலர் நனையுறுவ • * ஐந்தலை யவிர்பொறி அரவம், மூத்த மைந்தன், அருகொன்று மற்றிளம் பார்ப்பென ஆங்கிள மகளிர் மருளப் - சுனைகளின் கரையோரங்களிற் பற்பல மரங்கள் விளங்கின. . அவற்றின் மிகவும் நுண்மையான நுனிக்கொம்பர்கள். தாமும் சுனைநீராடலை விரும்பியவைபோலச், சுனைநீரின் பரப்பருகே சாய்ந்து கிடந்தன. அச் சுனைநீரிலே நீராடும் மகளிர்கள், அக் கொம்புகளிலே விளங்கிய மணங்கமழும் பூங்கொத்துக்களையும், கிளையைப் பிளந்துகொண்டு துளிர்த்த துளிர்களையும் இனி சுனை நீரிடத்தே உதிர்த்து உதிர்த்து விளையாடினர். - அங்ங்னம் அவர் உதிர்த்த சுனைநீரிடத்தே, உயர்த்த தலையையுடைய மலரும் பருவத்துத் தாமரை அரும்புகளிடத்தே பொருந்தி, அவை கிடந்தன. அவை வீழ்தலால் மலர்ந்த மலர்கள் தேன்துளிகளைப் பொருந்தின. அவை, அழகிய தலைமையும் ஒளிகொண்ட புள்ளிகளையுங் கொண்ட நாகப்பாம்பின் படத்தைப் போலத் தோன்றின. அதனருகே சற்றே சிறிதாக விளங்கிய மற்றொரு மலரானது, அப்பாம்பின் மூத்த மகனைப்