பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * திருமால் வாழ்த்து (1) ** 11 இப்பகுதி உறுப்புப் பெரிதும் சிதைவுற்றுக் காணப் படுவது; இத்ன் பொருள் அதனால் தெளிவாகவில்லை; அத்னால் பொருளும் தரப்படவில்லை. | - . . . . . . . அறிதல் அரிது பொருவேம் என்றவர் மதம்தபக் கடந்து செருமேம்பட்ட செயிர்தீர் அண்ணல் 30 இருவர் தாதை இலங்குபூண் மாஅல்! - தெருள நின் வரவு அறிதல் - மறுளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே; நின்னை எதிர்த்துப் போரிடுவோம்’ எனக் கூறி எதிர்த்து வந்தாரது செருக்கழிய, அவரை அழித்து வெற்றி கொண் டோனே! போர்க்களத்தே பகைவரினும் மேம்பட்டோனாக விளங்கும் குற்றமற்ற தலைவனே! நான்முகன், மதனன் ஆகிய இருவருக்கும் தாதையாகியவனே! ஒளியிலங்கும் பூண்களைப் பூண்டோனாகிய திருமாலே! நீ வந்து அருளுகின்ற அந்தச் செவ்வியை அறிதலானது, மயக்கற்ற தேர்ச்சியையுடைய அறிவிற் சிறந்தார்க்கும் அரிதாகும் பெருமானே! சொற்பொருள் : மதம்-செருக்கு கடந்து-வெற்றி கொண்டு. செரு போர். செயிர் - குற்றம். இருவர் - மதனனும் நான்முகனுமாகிய இருவர். மருள் மயக்கம். தேர்ச்சி - தெளிந்த முடிவு. முனைவன் முற்றிய அறிவன் முனைவன் கண்டது முதனூலாகும் என்பதைக் கருதுக. விளக்கம்: நின் வரவு அறிதல் மருளறு தேர்ச்சி முனைவர்க் கும் அரிதே' என்னும்போது, எளியேமாகிய எமக்கு இயலுமோ? ஆதலின், அதனை ஒரு பொருட்டாகக் கருதாது நீயேயாக வந்து எமக்கு அருளிச்செய்தல் வேண்டும் என்கின்றனர். படைப்புக்கு மூலமாகிய இச்சைக்கும், படைப்புக்குக் காரணமாகிய இருவர்க் கும் தாதையாகியவன் என்பதனால், படைப்போரைப் படைத் தானும் திருமாலே என்கின்றனர். - - - - எவன் எளிது? அன்ன மரபின் அனையோய்! நின்னை - இன்னன் என்று உரைத்தல் எமக்கெவன் எளிது? 35 மேற்கூறியவும் பிறவுமாகிய அத்தகைய் முறைமையினை உடையோனே! நின்னை இன்ன தன்மையன் என்று வரையறை செய்து கூறுதல், எமக்கு எவ்வாறு எளிதாகும்? - -- - சொற்பொருள் : மரபு முறைமை அனையோய் - அத்தன்மையோனே! எவன் - எவ்வாறு. - - -