பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பரிபாடல் φουφώ உரையும் - முற்றுபு முற்றுபு பெய்துசூல் முதிர்முகில் பொருதிகல் புலிய்ோழ்ந்த பூநுதல் எழில்யானைக் குருதிகோட் டழிகறை தெளிபெறக் கழிஇயின்று; 5 காலைக் கடல்படிந்து காய்கதிரோன் போயவழி மாலை மலைமணந்து மண்துயின்ற க்ங்குலான் வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர்நாற்றம் தேனாற்று மலர்நாற்றம் செறுவெயில் உறுகால கானாற்றுங்கார் நாற்றம் கொம்புதிர்த்த கனிநாற்றம் 10 தானாற்றம் கலந்துடன் தழிஇவந்து த்ரூஉம் வையை, மேகங்கள் கடலிற் படிந்து அதன் வளத்தைத் தாம் எடுத்துக் கொண்டவாய் மேலெழுந்தன. சூல் முதிர்ந்த மேகக் கூட்டங்கள் மலைப் பகுதியை முற்றுகையிட்டன. மலைப்பறைகள் சிதறுமாறு வலிய இடியேறுகள் சினங்கொண்டு முழங்கின. பெருமழையும் பெய்யத் தொடங்கிறது. கடலிற் கைக்கொண்ட நீரையெல்லாம் மேகங்கள் பெருமழையாகப் பொழிந்தன. இடியேறுகளின் கூட்டம் எப்புறத்தும் முழங்கின. - தன்னோடு போரினை மேற்கொண்ட பகையாகிய புலியைத் தன் கோடுகளாற் குத்திப் பிளந்து கொன்றது. பொலிவு விளங்கும் நெற்றியையுடைய களிறு ஒன்று. அதனால், அதன் கோடுகளில் குருதிக்கறை படிந்தது. அந்தக் கறை அகன்று, அவை பண்டே போல வெண்மை நிறத்தைப் பெறும்படியாக, மழைநீர் அவற்றைக் கழுவித் தூய்மை செய்தது. - - மேகங்கள் காலையிற் கடலிற் படிந்து, கடல்நீரை முகந்து மேலெழும். காயும் கதிரவன் மலைவாயிடத்தே சென்று மறைகின்றதான மாலைப் பொழுதிலே, தாமும் மலைமுகடு களைச் சென்றமையும். மண்ணகத்தே உயிரினமெல்லாம் துயில் கொள்ளும் இரவுப்போதிலே பெருமழையினைப் பொழியும். இவ்வாறு மழைதான் தொடர்ந்து பெய்தபடி இருக்கும். அதனாலே - - . . - மரங்கள் தருகின்ற மிகுதியான மலர்களது நறுமணமும், அம் மலர்களிடத்துப் படியும் வண்டினங்கள் மொய்த்த விடத்துச் சிதறும் தேன் துளிகளின் இனிய மணமும் எப்புறத்தும் எழுந்தன. முன்னர்ச் சுடுகின்ற வெயிலையும், மோதுகின்ற காற்றையும் கொண்டிருந்தன காட்டுப்பகுதிகள். அவ்விடங்களில் மழை பெய்ததால், அவ்வெப்பம் நீங்கப் புதிய மண்வாடையும் மண்ணின் ஈரமணத்தோடு எழுந்தது. மழையினது தாக்குதலால் மரக்கிளைகளினின்றும் உதிர்ந்து வீழ்ந்த கனிகளின் மணமும் எழுந்தது. இவ்வாறாகக் காட்டுப் பகுதியுள் புதுமழையினது வரவால் எழுந்த பலவகையான மணங்களையும் தன்னுள்ளே