பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாராயினர். 186 பரிபாடல் மூலமும் உரையும் வையையாற்றின் கரைகளிலிருந்த அகன்ற பொழில்கள் பலவும், பூத்துக் குலுங்கிய மலர்களினால் உண்டாகிய தம் இயல்பான மணத்தினும் மேலாக, யாற்றுநீர் பரவித் தரையின் வெம்மையை ஆற்றுதலால் எழுந்த மண்வாடையினையும் சேர்த்து எப்புறத்தும் பரப்பத் ஊர்களில் புதுவெள்ளத்தின் வரவை அறிவிக்கும் பறையொலியும் எழுந்தது. மதுரைநகர்க் கோட்டைச் சுவரின்மீது மோதிச் செல்லும் நீரினது ஒலியினாலே, மதுரைநகரத்து மக்கள் துயிலினின்றும் நீங்கியவராக எழுந்தனர். அவரவரும் வையையை நோக்கிச் செல்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால் தூக்க மயக்கத்தால், திண்ணிய தேரிற் பூட்டுதற்குரிய குதிரையைக் கொண்டுபோய் வண்டியிற் பூட்டினர்; அவ்வண்டியிற் கட்டுதற்குரிய எருதினைத் தேரிற் பூட்டினர்; குதிரைகளுக்குப் பூட்டுதற்குரிய சேணம் முதலியவற்றைக் களிற்றுக்கு இட்டனர்; சிலர் யானை குதிரை களுக்கு எதனையும் அணிவியாமலே ஏறியமர்ந்து செலுத்து மகளிர் அளிதற்குரய கோதைகளை மைந்தர் அணிந்து கொண்டனர். மைந்தர் அணிதற்குரிய குளிர்ந்த மாலைகளை மகளிர் சூடிக்கொண்டனர். அனைவரும் தாம்தாம் முந்திச் செல்லவேண்டும் என்றே விரும்பினர். அவ்விருப்பத்தாலே அணிகளை அணியும் முறைகளையும் மறந்து, முறை மாற்றி அணிந்தவராக விரைந்து சென்றனர். வையையின் இருபுறக் கரைகளின்மேல் இளமகளிர் பொய்தல் இழைத்து விளையாடியிருப்பர். அக் கரைப்பகுதியில் நிற்கும் மரங்களிலிருந்து வீழ்ந்த மலர்களை விரும்பியவாய் அழகிய வண்டுகளும் அங்கே மொய்த்துக் கொண்டிருக்கும். அத்தகைய மணற்கரைகளின் கழுத்தளவிற்குப் புதுவெள்ளம் பெருகிச் சென்றது. முற்பட்டுப் புறப்பட்டுச் சென்றவர் பெரிய புதுப்புனற் பெருக்கினை அடைந்து நீராடிக் களித்தனர். பிற்பட்டுப் புறப்பட்டார் பலரும் மதுரைத் தெருக்களில் நின்று மக்கள் நெருக்கத்தால் மேற்செல்ல இயலாராய்ச் செயலற்று மயங்கி நிற்பாராயினர். . . - தகைமை பொருந்திய வையையானது, இவ்வாறு, அனைவரும் சென்று சேர்தலை விரும்பும் அந்தப் புதுமையான தன்மையைப் பெற்றுத் திகழ்ந்தது. - சொற்பொருள் : நாற்றம் - மணம் வெம் நாற்று வேசனை - நாற்றம் - வெம்மையாலே தோன்றிப் பரவிய நாற்றம் குதுகுதுப்ப அது தீர்ந்து குளிர்ந்த வாடையாக எழ. ஊரூர் ஊர்கள் தோறும் - துயிலுணர்வு தயில் நீங்கி எழுந்து. வங்கம் - ஒரு வகை வண்டி