பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 புலியூர்க்கேசிகன் வையை (20)- 187 வயமா - வலிய குதிரைகள் மதமா மதத்தைக் கொண்ட களிறு, கயமா யானையும் குதிரையும். கோதை - மகளிர் தலைமாலை. தார். ஆடவர் மார்பிடத்து அணியும் மால்ை பொய்தல்-மகளிர் விளையாட்டு அணி வண்டு அழகிய வண்டு. எருத்தம் - கழுத்து. விளக்கம் : மக்கள் புதுநீர் ஆடுதற்குச் சென்ற விரைவை நயமாகக் கூறுகின்றார். மாட மறுகின் மருவி மறுகுற' என்பது, மிகவும் நயமாக அவர் நிலையை விளக்குவதாகும். தகைவையை கூடல் விழையும் தகைத்து' என்பதனால் நின் தலைவி தானும் அத் தகையளே' என்பனையும் உணர வைக்கின்றனன், பாணன். நிலை காண்மின் புகைவகை தைஇயினார் பூங்கோதை நல்லார் தகைவகை தைஇயினார் தார்; - வகைவகை தையினார் மாலை மிகமிகச் சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் 30 இயலணி அணிநிற்ப ஏறி அமர்பரப்பின் அயலயல் அணிநோக்கி ஆங்காங்கு வருபவர் இடுவளை ஆரமோடு ஈத்தா னுடனாகக் கெடுவளை பூண்டவள் மேனியிற் கண்டு நொந்தவள் மாற்றாள் இவளென நோக்கத் 35 தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்! செருச்செய்த வாளி சீற்றத் தவையன்ன. நேரிதழ் உண்கண்ார் நிறைகா டாக - ஓடி ஒளித்தொய்யப் போவாள் நிலைகாண்மின்! . வையைக் கரையிலே ஆடவரும் மகளிருமாகத் திரண்டு நின்றனர். மகளிர்க்குப் பிறமகளிரது அணிகளைக் காண்பது மகிழ்ச்சிதரும் அல்லவா! அவ்வாறு ஒருவர் ஒருவராகப் பார்த்துக் கொண்டு வந்த பெண்களுள் ஒருத்தி, தன் தலைவியின் அணிகளுட் சிலவற்றை ஒரு பரத்தையின்மேற் கண்டு திடுக்கிட் டாள். இவள் நம் தலைவனின் பரத்தையோ? என ஐயுற்று, அவளையே நோக்கினாள். அதனைக் கண்டு தலைவன் நாணி நின்றான். அப் பரத்தையோ வெட்கியவளாக, மகளிர் கூட்டத் துள் விரைந்து புகுந்து மறைந்தாள். அவள் நிலையைக் கண்டு, மற்றவர் எல்லாரும் சிரித்து நகையாடினர். பெண்கள் அணியணியாக வையைக் கரையில் நின்றனர். கூந்தற்கு அவர்கள் வகைவகையான நறும்புகையினை ஊட்டி யிருந்தனர். அவ்வாறு நறும்பூகை யூட்டப்பெற்று, நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் கூந்தலிடத்தே, பூமாலைகளையும் அழகியர் சிலர் அணிந்திருந்தனர். சிறந்த வகைமையோடு திகழுகின்ற மாலைகளையும் அவர்கள் அணிந்திருந்தனர். வகை வகையான பூக்களால் தொடுத்த மாலைகளை வகைவகையாகக்