பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 . . - பரிபாடல் மூலமும் உரையும் கட்டியும் தொடுத்தும் அவர்கள் அணிந்திருந்தனர். தலையுச்சி யிலே குடிக்கொள்ளும் சூட்டெனவும், கூந்தலிற் சூடிக்கொள்ளும் கண்ணியெனவும், பெரிதாக அமைந்த வலயம்'என்னும் வட்ட மாலையெனவும் வகைவகையாக அணிந்தவர்களாக, தங்கள் இயல்பான அழகினை அணிவகைகள் மேலும் உயர்த்துக் காட்ட இளம்பெண்கள் பலரும், அணியணியாக வையைக்கரையிலே சென்று நின்றனர். - - - சிலர் தாங்களும் கரையிடத்தே ஏறினர்.விரும்பத்தகுந்த அக் கரைப்பரப்பின் கண்ணே, ஆங்காங்கே அடுத்தடுத்து நின்றவர் களின் வகைவகையான அணிநலத்தை நோக்கி இன்புற்றபடியே, அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு தலைவியின் தோழியரும் சிலர் இருந்தனர். அவர்கள் அவ்விடத்தே தம் தலைவனையும், அவனருகாக நிற்கும் ஓர் இளம்பரத்தையையும் கண்டனர். ' - - - கையில் இடுதற்கான வளையல்களையும், முத்தாரத்தையும் தனக்குத் தந்தானாகிய அத் தலைவனுடன், அப் பெண்ணும் உடனாக நின்று கொண்டிருந்தாள். 'கெட்டது' என்று பேச் செழுந்த தம் தலைவியின் வளைகளைப் பிற அணிகளோடு சேர்த்து அணிந்திருந்தாளான அப் பரத்தையின் மேனியிற் கண்டதும், அவர்கள் பதைத்தனர், அக் கற்பு உடையவளின் மாற்றாள் இவள்?' என, அப் பரத்தையையே சினத்துடனும், எள்ளலுடனும் கூர்ந்து நோக்கினர். அவர்கள் நோக்கிய நோக்கையும், தான்செய்த தவற்றினையும் கண்டான் தலைவன். தன் திருட்டை அவர்கள் அறிந்து கொண்டனரென்பதனை அதனைப் பாருங்கள் என்று, அப் பெண்கள் தமக்குள் சுட்டிப் பேசி நகையாடலாயினர். - - தலைவனருகே நின்றாளான பரத்தையும் இவற்றைக் கண்டாள். அவள் உள்ளம் வெட்கத்தாற் குன்றியது. இவர்கள் பார்வையிலிருந்து ஒடி ஒளிந்துகொள்ள வேண்டும் என்று அவள் துடித்தாள். அவள் நிலைகண்ட தோழியர் சீற்றம் கொண்டனர். அதனால் அவர் கண்கள் போரினைச் செய்த அம்பு முனை யினைப்போலச் சிவந்தன. தம்முள் நேரொத்த இமைகளைக் கொண்டனவும், மையுண்டனவுமாகிய கண்களை உடைய அப்பெண்கள் கூட்டம் அனைத்தும் அப்பரத்தை யையே நோக்கின. அவள் தளர்ந்தாள். ஒடி ஒளிந்து தப்பிவிட முயன் றாளாக, அவள் விரைந்து மக்கள் கூட்டத்துட் புகுந்து மறைந்து, நகரை நோக்கிச் செல்லலானாள். அவள் நிலையைக் காண்பீர்! எனத் தோழியரும் அவளைச் சுட்டி அனைவருக்கும் காட்டி நகையாடினர். - -