பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (20) - 193 ஒருபொருட்டாக நீயும் கருதாதே" என்று தலைவிடம் சொல்லி அவளையும் அமைதிப்படுதினர் அம் மகளிர் . . . சொற்பொருள் : ஆயம் - தோழியர் கூட்டம் அமர்தல் - விரும்புதல். மாயப் பொய் - வஞ்சனையான பொய்; வஞ்சிக்கக் கருதியே கூறும் பொய். விலைக்கணிக்கை -விலைமகள். பிணை - துணை, துற்றுவ நுகர். காரிகை - அழகு. மூரி - இள எருது. மடமதர் இளமையும் களிப்பும், மடவிரல் இளவிரல் பரத்தையின் விரல். யாழார்த்தும் பாணியில். யாழிசைத்து இன்புறுத்தும் அந்தக் காலத்தில் பொய்தல் - மகளிர் விளை யாட்டு வடித்து இடித்து அதட்டியும் இடித்தும். மத்திகை சாட்டை அவ்ையம் - மகளிர் கூட்டம். தண்டம் வீணாக, காணிக்கையாக பிணி - பாவப்பிணி, செறேற்க - சினவாதே கொள். மைந்து அறியாமை, மனத்தக்க மனத்திற் கொள்ளத்தக்க நிலைபெறத்தக்க வேற்றார் - முன்பின் அறியாதார்; புதியர் பகைவர். இளிவரவு இழிவு புரையோய் உயர்ந்தவளே. புரையின்று - உயர்வில்லை. விளக்கம் : பரத்தை தலைவனால் விரும்பப்பட்டவள் எனினும்கூடப், பெண்கள் கூட்டத்துள், அவளுக்கு உயர்வு இல்லாமற் போவதும், தலைவியே மதிக்கப்படுவதும் காண்க சிந்திக்கத் தீரும் பிணியாள் என்னும் சிறப்பைத் தலைவிக்குப் பிறமகளிர் தந்த சீர்மையையும் நினைக்க . விலை தந்தான் அ.சொநல்லவை நாணாமல் . . தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா 75 - எந்தை எனக்கித்த இடுவளை ஆரப்பூண் - வந்தவழி நின்பால் மாயக் களவன்றேல் தந்தானைத் தந்தே தருக்கு; மாலையணிய விலைதந்தான்; மாதர்நின் கால சிலம்பும் கழற்றுவான்; சால - 80 அதிரலங் கண்ணி நீ அன்பனெற் கன்பன் கதுவாய் அவன் கள்வன்;கள்வி நான் அல்லேன்; என வாங்கு, s - - - நினக்கு இவ்வணிகளைத் தந்தானைச் சொல்?’ என்று தலைவி அவளிடம் கேட்கின்றாள். நின் தலைவன், எனக்கு விலையாகத் தந்தான்; அவனைக்கேட்க?' என்று செருக்குடன் கூறுகின்றாள் அந்தப் பரத்தை - - “நல்லனவாகிய இனிய மெல்லிய சொற்களை நாணாதே எடுத்துச் சொல்லியவளாக, மத்தளத்தின் ஓசையைப்போன்று முழக்கியபடி வருபவளே! நீதான் நின் பேச்சைக் கைவிடுக. என்