பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - பரிபாடல் ാഗ്രഥ உரையும் விளக்கம் : நின்னை இத்தகையான் எனவுரைத்தல் எமக்கு எளிதன்று; ஆகவே எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையிற் புகழ் வோம்; அதனையும் ஏற்று எமக்கு அருள்க என்பதாகும்.மடங்கல் ஊழிப் பெருந்தி (மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும் கலி 105). - - - அருளல் வேண்டும்! அருமைநற் கறியினும் ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லாய் யாமிவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது அல்லியந் திருமறு மார்ப நீ அருளல் வேண்டும்! - - நின் தண்கமைகளை அறிந்து நின்னைப் போற்றுதல் அரிய செயலாகும். அதனை நன்கு அறிந்தபோதிலும் எம் ஆர்வம் நின்னடத்தாகவே உள்ளது. பெருமைகளுள் வல்லவனே! யாம் இவ்விடத்தே கூறுபவை எல்லாம் பொருள்வளமற்ற புன் சொற்கள் என்று கருதி வெறுத்துவிடாது, அகவிதழ்களுடன் பொருந்திய செந்தாமரை மலரிலே வீற்றிருப்பவளான திருமகள் விளங்கும் மார்பினனாகிய நீயும், எமக்கு இரங்கியவனாக அருளிச் செய்தல் வேண்டும், பெருமானே! சொற்பொருள் : அருமை - அவனை முற்றவும் அறிந்து கூறுதற்கு இயலாத அருமைப்பாடு'ஆர்வம் விருப்பம் மெல்லிய - வன்மையற்றவை; பொருட்செறிவற்றவை. அல்லி-அகவிதழ்கள். விளக்கம் : நெஞ்சத்திடத்து அம்மையைக் கொண்டவ னாகிய நீ, எம்பாற் கருணைகொண்டு, எம் போற்றுதலையும் உவந்தேற்று, எமக்கும் உதவுவதற்கு முற்பட வேண்டும் என்பதாம். அனைத்தும் நீ! - விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் - 40 அறனும், ஆர்வலர்க்கு அளியும் நீ! - திறனிலோர்த் திருத்திய தீதுதிர் சிறப்பின் மறனும், மாற்றலர்க்கு அணங்கும் நீ! அங்கண்ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் - திங்களும், தெறுகதிர்க் கனலியும் நீ! . 45 ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும், மடங்கலும் நீ! நலமுழுது அளைஇய புகரறு காட்சிப் புலமும், பூவனும், நாற்றமும் நீ! வலனுயர் எழிலியும், மாசு விசும்பும் நிலனும், நீடிய இமயமும் நீ! - 50