பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - - பரிபாடல் மூலமும் உரையும் தந்தை எனக்குச் செய்தளித்த இடுவளையும் முத்தாரமும் ஆகிய அணிகள் நின் மேனியிடத்தே வந்துசேர்ந்த வகைதான். யாது? நின்னிடத்தே மாயக் களவுசெய்யும் தன்மை இல்லாதிருந்தால், அவற்றை நினக்குத் திருடித் தந்தவனைக் கூறிவிட்டு நீ செருக்கிப்பேசுவாயாக’ என்கிறாள் தலைவி. - - "மோசிமல்லிகைக் கண்ணியைச் சூடியுள்ளவளே! நினக்கு அன்பன்ாகிய தலைவன், எனக்கும் அன்புடையான் ஆவன். நினக்குப் பற்றுக்கோடாகிய அவனே கள்வன்; நான் கள்வி அல்லேன். பெண்ணே! என்னை அடைதற் பொருட்டு எனக்குரிய விலையாக அவன் இவற்றைத் தந்தான். நாளை நின் காற்சிலம்பையும் கழற்றித் தருவான்; அவன்பாற் சென்று இதனைப் பற்றிக் கேட்பாயாக’ என்கின்றாள் அப்பரத்தை சொற்பொருள் : அ.சொனல்லவை - நல்லனவாகிய மெல்லிய இனிய சொற்கள் என்பர் பரிமேலழகர் பிற்காலத் திடையிற் சில எழுத்துக்கள் மறைந்தன. முழவு-மத்தளம் முழவின் வருவாய் - மத்தளத் தாளத்திற்கேற்ப ஆடி வரும் ஆடன் மகள் எனவும், மத்தள வொலிபோல முழக்கியபடி வருவாய் எனவும் கொள்க.எந்தை தலைவியின் தந்தை அவன் ஈத்த என்றதனால், பெண்கட்குப் பற்பல அணிகளையும் பூட்டி மணஞ் செய்து தருதலும் பண்டை வழக்கம் எனலாம்; அது தன் பிறந்த வீட்டுச் சொத்து தலைவனுக்கு உரிமையற்றது என்பதுமாம். மாலை யணிய-என்பது பரத்தையை அடைதற்கு என்பதாகும். மாதவியின் மாலையை விலை பகர்தலையும் நினைக்க. பூவிலை மடந்தையர் என்பதும் இதனாற் போலும். - விளக்கம் : தன் அணிகளை அவளுக்குத் தந்தவன் தன் தலைவனே என்பதறிந்ததும், அவனைத் தன் வாயாற் கள்வ னென்று கூறாமல், பரத்தையையே கள்வி' எனவும், கள்வி இன்றேல், தந்தான் யாவன்? எனவும் கேட்கும் தலைவியது செம்மையை நினைக்க நின் காற் சிலம்பு கழற்றுவான்’ என்று பரத்தை கூறுவது, தலைவன் தன்னிடத்தே விருப்புற்று மயங்கிக் கிடப்பவன்; தனக்காக எதையும் செய்பவன்; அவனைத் தலைவியால் தடுக்கவியலாது என்னுஞ் செருக்கினாலாம். வையைச் சிறப்பு! வச்சிய மானே! மறலினை மாற்றுமக்கு - நச்சினார் ஈபவை நாடறிய நும்மவே - 85 சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்தொழுகல் கூடுமோ? கூடா; தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;