பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * வையை (20) . 195 நிகழ்வ தறியாது நில்லுநீ நல்லாய்! 90 மகளிரை மைந்துற்று அமர்புற்ற மைந்தர் அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் முடிபொருளன்று முனியல், முனியல் கடவரை நிற்குமோ காமம், கொடியிழாய்! எனவாங்கு, 95 இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும் தென்னவன் வையைச் சிறப்பு: அங்கு நின்றாரான பெண்கள் பலரும், இருசாரார்க்கும் .. இடையே நிகழவிருந்த பூசலைத் தடுத்து, இருவரையும் அமைதிப் படுத்துகின்றர். - . “காண்பாரை அழகால் வசியப்படுத்தும் மானைப் போன்ற, வளே! தலைவியோடு மாறுபட்டு நிற்றலைக் கைவிடுக. தும்மை - விரும்பிவரும் ஆடவர் நுமக்குத்தந்த பொருள்கள் எல்லாம், இந் நாடறிய நும்முடையவே யாகும்” என்று அப்பரத்தையிடத்தே கூறி, அவள் சினத்தைத் தணிவித்தனர். - * "சேர்கைக்கு இனியவரான பரத்தையிடத்தே செல்வா னாகிய தன் கேள்வனை, அவன் மனையாளால் அப் பிழையைப் பொறுத்துக் குடும்பநலனைக் காத்தலன்றி, அவனைச் சினந்து ஒதுக்கி வாழ்தல் என்பதும் பொருந்துமோ? பொருந்தாதே." "கற்பென்னும் தகுதியுடையவரான பெண்டிர் சான்றாண் மை உடையோருள் எல்லாம் உயர்ந்தோர் ஆவர். அவர், தம் கேள்வர் தம்மை இகழ்ந்து ஒதுக்கிய காலத்தினும் அவரைப் போற்றி வழிபடுவர். நற்பண்பிற் சிறந்தாளே! இவ்வாறு நீங்கள் பூசலிடுவதன் விளைவை அறியாதே மேற் செல்லாதே. அப்படியே நிற்பாயாக. - - ‘பரத்தையார்பால் காமுற்று ೨/೧೯೧7, கூடியொழுகிய வரான தம் கேள்வரின் மார்பினை யாம் இனித் தழுவேமாய் ஒதுக்குவுேம்" என்ற விலக்குவது எப்பெண்ணுக்கும் முடியக் கூடிய ஒரு செயலும் அன்று; அதனாற் பெரிதும் சினவாதே! “காமம் என்பதுதான் நிற்கக்கூடிய எல்லை இதுவென அறிந்ததாய், அந்த எல்லைக்குள் நிற்கும் தன்மையதோ? பூங்கொடியின் இயலினை உடையவளே!” - . இவ்வாறு தலைவிக்கும் அவர்கள் சில அறிவுரைகளைக் கூறினர். பாண்டியனது வையையாறு, இவ்வாறு மக்களுக்குப் பெருஞ்சினமும் ஊடலும் உண்டாக்கும் ஒரு சிறப்பினையும் கொண்டது ஆகும். ... " .