பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ဖ္ရိပ္ပါဒါစံ၊ * ഞഖങ്ങധ 20 197 - சொற்பொருள் : கொடி பூங்கொடி உடலுதல் - சினத்தல். தூங்குவன வீழ்வன. சினை மரக்கிளை. புத்ல் - புதர். துரந்து தள்ளிக் கொண்டு சென்று. மால் - பெரிய சுருங்கை நிலத்துள் அமைந்த நீர் வழி, அணத்து உயர்த்து. கடி மதில் காவலையுடைய மதில். r விளக்கம் : பல வகைப் பூக்களையும் புதுநீர் கொணர, சுருங்கைவழிப் பாயும் அந்நீர் அப்பூக்களுடன், கடுமா களிறு அணத்துக் கைவிடு நீர்போல விளங்கிற்று என்று கொள்க. வையையின் இயல்பு நாமமர் ஊடலும் நட்பும் தணப்பும் காமமும் கள்ளும் கலந்துடன் பாராட்டத் தாமமர் காதலரொ டாடப் புணர்வித்தல் பூமலி வையைக்கியல்பு ஊடுதலும், கூடுதலும், அச்சந்தரும் சிறு பிரிவும் ஆகிய இம்மூன்றுடனும் சேர்ந்த காமத்தையும் கள்ளையும் ஒன்றாகக் கலந்து, அனைவரும் பாராட்டுமாறு அளிப்பது வையைப் புது நீர்வரவு தாம் விரும்பும் அன்புடையாரோடு சென்று புனலாடும் பொருட்டு, அவரைத் தம்முள் சேர்த்து வைத்தலும் பூக்களால் மிகுந்த வையைப் புதுநீர்க்கு இயல்பு ஆகும். "ஆகவே, நின்னைப் பிரிந்து அப்பயனைப் பெறாதே வாடியிருக்கும் நின் தலைவியை இன்புறுத்த நீயும் கருதினையானால், நீயும் இப்போதே புறப்படுவாயாக’ என்பதாம். . . . . - சொற்பொருள் : நாமம் - அச்சம். ஊடல் - பிணக்கம், ஊடலும் எனவும் பாடம். தணப்பு - பிரிவு. காமமும் கள்ளும் களிப்புத் தருவன : இரண்டையும் பெறும் மாந்தர் பெருங்க்ளிப் பால் இன்புற்று மகிழ்வர் என்பதாம். அமர்தல்- விரும்புதல். விளக்கம் : இவ்வாறு புனலாடலினை நயமாகக் கூறியதன் மூலம், தலைனை அந்நினைவுகளிலே செலுத்தினான். பாணன். அவனும், அதனை மேற்கொண்டு தலைவியின் துயரைப் போக்கக் கருதினான். அதனால், அவ்வளவிலே திரும்பிப் புறப்பட ஏற்பாடு செய்யலானான் என்க. - இனித் தலைவன் பரத்தையிற் பிரிந்து வாழ்ந்தவன் என்றும், அவன் உள்ளத்தைத் தலைவிபால் திருப்புதற்கே இவ்வாறு சிறந்த கற்பனை நாடகத்தைப் புனைந்து பாணன் கூறினன் எனவும் கருதலாம். சிந்திக்கத் தீரும் பிணியாள் என்று, பிறமகளிர் போற்றும் தகைமையுடையாளான தலைவியைப் பிரிதல் நினக்குச் சிறப்பாகுமோ என்றானுமாம். தலைவியைப் பிரிதல் நினக்குச் சிறப்பாகுமோ என்றானுமாம். தகவுடை மங்கையர் நிலையைக் கூறியது, தலைவி அவனைப் பொறுத்து ஏற்றற்குரிய மனநிலையினள் என்று உணர்த்துதற்காம்.