பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பரிபாடல் மூலமும் உரையும் இருபத்தொன்றாம் பாடல் செவ்வேள் வாழ்த்து (2) பாடியவர் : நல்லச்சுதனார்; பண் வகுத்தவர் கண்ணகன்ார்; பண் : காந்தாரம். பிணிமுகம் ஊர்ந்தோய் - , ஊர்ந்ததை, - - எரிபுரை ஒடை இடையிமைக்கும் சென்னிப் பொருசமம் கடந்த புகழ்சால் வேழம்; - - பெருமானே! செவ்வெரியைப் போல ஒளிவீசும் செம் பொன்னாலாகிய நெற்றிப்பட்டமானது, விட்டுவிட்டு ஒளி செய்து கொண்டிருக்க விளங்கும் சென்னியை உடையதும், தான் சென்று மோதும் போரிடத்தெல்லாம் பகையை அழித்து வெற்றியே பெறுவதுமாகிய, புகழால் மிகுந்த பிணிமுகம்’ என்னும் போர்க்களிற்றினை ஊர்தியாக உடையோனே! - சொற்பொருள் : எரி-எரியும் நெருப்புக் கொழுந்து ஓடை நெற்றிப் பட்டம். இடையிமைத்தல் - விட்டுவிட்டு இடை யிடையே ஒளிசெய்தவண்ணம் விளங்குதல், சென்னி - தலையின் முன்பகுதி, நெற்றி. கடந்த வென்ற புகழ்சால் புகழ் மிகுந்த வேழம் என்றது, பிணிமுகக் களிற்றை - - அடையல் அணிந்தோய் தொட்டதை தைப்பமை சருமத்தின் தாளியை, தாமரை துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய வெளிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த 5 வளிமலி அரவுரி வள்புகண் டன்ன புரிமென் பீலிப் போழ்புனை அடையல், தைப்பதற்கென அமைந்த தோலின் மேற்புறத்தைத் தாமரை மலரைப் போலும் தகைமைவாய்ந்த துவர்நீர்த் துறையிடத்தே அழுத்திப் பதப்படுத்துவர். முதுகுப்பக்கத் தோலோடும் முற்றவும் மயிர்செறிந்திருக்கும் அதனிடத்தே, கோடுகள் மலிந்த பாம்புத் தோலைப் பிளந்து எடுத்தாற்போல விளங்கும் மயிற்பீலிகளின் ; : அழகிய மென்மையான பிளவு களாலே அழகுபடுத்துவர். இவ்வாறு செய்தமைத்த அடையல் என்னும் காலணியைப் பூண்டு வருவோனே! - - சொற்பொருள் : தொடுதல் அணிதல். சருமம் - தோல். உடலைச் சார்ந்திருந்து அழகுபடுத்துவதால் சருமம் ஆயிற்று; தாமரை துப்பமை துவர்நீர்-செம்மண் கலங்கலான நீர் தாமரைப்